ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவியில் இருந்து ரகுராம் ராஜன் நீக்ககோரி ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடிக்கு இரண்டு கடிதங்கள் எழுதியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் வால்ஸ்ட்ரீட் எனும் பத்திரிக்கையாளர் மோடியிடம் "ஆர்பிஐ கவர்னராக ரகுராம் ராஜனை மீண்டும் தேர்வு செய்வதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதில் அளித்த பிரதமர் மோடி, “இந்த விவகாரம் நிர்வாகம் தொடர்பானது, மேலும் இது ஊடகம் சார்ந்த விவகாரம் இல்லை என்றும். மேலும் அவரது பதவிக்காலம் செப்டம்பர் மாதம் வரை உள்ளது” என்றார்.
பொருளாதாரம் பற்றிய விவகாரங்கள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் வெளிப்படையாக ஊடகங்களுக்குத் தெரிவித்து வருகிறார். மேலும் நாட்டின் உண்மையான பொருளாதார நிலைமைகளை எடுத்து கூறுகிறார். பொதுவெளியில் எப்போதும் புரியாத பரிபாஷையில் பொருளாதாரம் பற்றிய விவகாரங்கள் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.