வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பீகாரில் பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிடும் என ஏற்கனவே தகவல்கள் வந்தது. ஆனால் தொகுதி பங்கீடு குறித்து எதுவும் கூறப்படவில்லை.
டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற சந்திரபாபுவின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்!
பிஹார் மாநிலத்தில், சுகாதரம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கொடுக்கப்பட்ட புத்தகத்தில் பாக்கிஸ்தான் தேசிய கொடி இடம்பெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
பீகார் மாநிலத்தின் சாகர்ஸா பகுதியில் உள்ள மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் டார்ச் லைட் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பீகார் மாநிலத்தின் சாகர்ஸா பகுதியில் உள்ள மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் டார்ச் லைட் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சமீபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த கட்சிகளைச் சேர்ந்தவர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை.
பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார், லாலு மற்றும் காங்கிரஸ் உடனான மகா கூட்டணியை உடைத்துவிட்டு பாஜகவுடன் இணைந்து ஆட்சியை அமைத்து உள்ளார். இதனால் உள்கட்சி விரிசலும் உள்ளது.
இப்போது மத்திய அமைச்சரவையில் அக்கட்சிக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டதும், ஏமாற்றத்தில் முடிந்தது.
பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) வருகை புரிந்தார்.
முன்னதாக பீகார் முதல்வர் நிதீஷ் குமார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் உணவு முகாம்கள் நடத்தப்படுவதாக உறுதிபடுத்தியுள்ளார்.
ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜாஷ்வி யாதவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக கூறி, கடந்த மாதம் பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதீஷ் குமார் ராஜினாமா செய்தார். ஜே.டி.யு. மற்றும் ஆர்.ஜே.டி இடையே இருந்த பெரும் கூட்டணியை கலைத்தார். கூட்டணியை கலைத்த சில மணி நேரத்திற்குள் நிதீஷ் பழைய கூட்டாளியான பி.ஜே.பி உடன் புதிய கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சர் பதவி ஏற்றார்.
சரத் யாதவிற்கு பாஜகவுடனான கூட்டணியை ஏற்கவில்லை என்றால் காட்சியில் இருந்து வெளியேறலாம் எனவும், நீங்கள் விரும்பும் கூட்டணிக்கு செல்லலாம் என பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
கடந்த மாதம் பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதீஷ் குமார் ராஜினாமா செய்தார், ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜாஷ்வி யாதவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக கூறி, ஜே.டி.யு. மற்றும் ஆர்.ஜே.டி இடையே இருந்த பெரும் கூட்டணியை கலைத்தார். கூட்டணியை கலைத்த சில மணி நேரத்திற்குள் நிதீஷ் பழைய கூட்டாளியான பி.ஜே.பி உடன் புதிய கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சர் பதவி ஏற்றார்.
பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஷ்வி யாதவ், பீகார் முதல்வர் நிதீஷ் குமார் குறித்து பல கருத்துகளை முன்வைத்துள்ளார்.
அதன்படி அவர் கூறியதாவது நிதீஷ் குமாரின் தற்போதைய அரசாங்கத்தை மிக விரைவில் கலைக்கப்படும், மேலும் அவர் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்வதில் தோல்வி அடைவார் என்றும் கூறினார். நிதீஷ் எங்களுடன் பணியாற்ற விரும்பவில்லை என்றால், அவர் ஏன் இத்தனை காலம் காத்திருந்தார்?என கேள்வி எழுப்பினர்.
மேலும் பனாமா பேப்பர்ஸ் கசிவு வழக்கில் பெயரிடப்பட்ட நபர்கள் அனைவருக்கும் எதிராக விசாரணை நடத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் வைத்தாரா? என கேட்டுள்ளார்.
பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இடஒதுக்கீடு அளித்ததற்குப் பிறகு, விரைவில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டரசாங்கத்தின் ஒரு பகுதியாக அ.இ.அ.தி.மு.க., மாறும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களின் பொதுகூட்டம் ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடத்தவுள்ளதாகவும், இஇந்த கூட்டணி தொடர்பாக பிரதான அறிவிப்பு அன்று வெளியிடப்பட்டும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.