பிரசாந்த் கிஷோர் பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் முன்னிலையில், ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார்.
கடந்த 2012 குஜராத் தேர்தல், 2014 லோக்சபா தேர்தலில் பா.ஜ.க ஆதரவாக மோடி உடன் பணியாற்றியவர் பிரசாந்த் கிஷோர். இவர் வகுத்து தந்த திட்டத்தின் படி, செயல்பட்ட பா.ஜ.க குஜராத்திலும் பொது தேர்தலிலும் ஆட்சியை கைப்பற்றியது. தொடர்ந்து உத்திர பிரதேசத்திலும் பெரும்பாலான இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றது. இதனையடுத்து பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சியினரிடையே புகழ் பெற்றார்.
ஒவ்வொரு மாநிலகட்சிகளும் தங்களின்மாநிலங்களுக்கு வந்து தங்களை வெற்றிபெற செய்யும் படி பிரசாந்த்திற்கு அழைப்பு விடுத்தன. இதனை ஏற்ற பிரசாந்த்கிஷோரும் ஒரு சில மாநிலங்களுக்கு சென்று அம்மாநில கட்சிகள் ஆட்சியை கைப்பற்றும் விதமாக தேர்தல் வியூகம் வகுத்து தந்துள்ளார்.
இந்நிலையில், இந்நிலையில், பாட்னாவில் , பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ்குமார் முன்னிலையில், அக்கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைந்தார். அப்போது, பிரசாந்த் தான் கட்சியின் எதிர்காலம் எனக்கூறிய நிதிஷ், ஜீன்ஸ் உடையில் வலம் வரும் பிரசாந்த், அரசியல்வாதி போல் உடை அணிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Election strategist Prashant Kishor joins JDU in the presence of Bihar Chief Minister Nitish Kumar in Patna pic.twitter.com/UAkF3df2ee
— ANI (@ANI) September 16, 2018