இந்திய மாணவர்களின் புத்தகத்தில் பாக்கிஸ்தான் தேசியகொடி?

பிஹார் மாநிலத்தில், சுகாதரம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கொடுக்கப்பட்ட புத்தகத்தில் பாக்கிஸ்தான் தேசிய கொடி இடம்பெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

Last Updated : May 6, 2018, 10:12 AM IST
இந்திய மாணவர்களின் புத்தகத்தில் பாக்கிஸ்தான் தேசியகொடி? title=

பிஹார் மாநிலத்தில், சுகாதரம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கொடுக்கப்பட்ட புத்தகத்தில் பாக்கிஸ்தான் தேசிய கொடி இடம்பெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

பிஹார் மாநிலம் ஜாமுய் மாவட்டத்தில் குடிநீர் சுத்திகரிப்பு குறித்து விழிப்புணர் ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர் புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் சிறுமி ஒருவர் பாக்கிஸ்தான் தேசிய கொடியினை வரைவது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையினை கிளப்பியது.

இதனையடுத்து பிஹார் முதல்வர் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரிவிட்டார். 

விசாரணையின் பின்னர் மாவட்ட நீதவான் தர்மேந்திர குமார் தெரிவிக்கையில்... இந்த விழிப்புணர்வு புத்தகங்கள் பாட்னா தனியார் நிறுவனத்தால் அச்சடிக்கப்பட்டது. இந்த புத்தகத்தில் அச்சடிக்கப்பட்ட புகைப்படங்கள் யாவும் UNICEF வலைதளத்தில் இருந்து பெறப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். அச்சடிக்கையில் இந்த புகைப்படத்தினை கவணிக்கவில்லை எனவும், அச்சடிக்கப்பட்ட பின்னர் அந்த புகைப்படத்தினை கிழித்துவிட்டு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இச்சம்பவம் குறித்து அளும் அரசின் மீது விமர்சணங்கள் வைக்கப்பட்டு தான் வருகின்றது! 

Trending News