சொந்த வீடு கனவு நனவாக இந்த 4 முக்கிய தவறுகளை செய்து விடாதீர்கள்..!

Own House  | சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர்கள் நீண்ட காலம் காத்திருப்பது பலன் தராது ஏன்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 27, 2024, 09:39 AM IST
  • சொந்த வீடு கட்டப்போறீங்களா?
  • இந்த 4 தவறுகளை செய்யாதீங்க
  • சொந்த வீடு கனவு நனவாகாது
சொந்த வீடு கனவு நனவாக இந்த 4 முக்கிய தவறுகளை செய்து விடாதீர்கள்..! title=

Own House Building Tips Tamil | வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு தான் தெரியும் சொந்த வீட்டின் அருமை. அவர்களுக்கு எல்லாம் சொந்த வீடு என்பது பெருங் கனவு. வாடகை வீட்டிலேயே வசித்து காலத்தை கழிப்பதை விட ஒருநாளாவது சொந்த வீட்டில் விரும்பும்படி வாழ வேண்டும் என்பது அவர்களின் வாழ்நாள் ஆசையும் கூட. ஆனால், சொந்த வீடு கனவு வைத்திருக்கும் பலரும் செய்யும் தவறுகள் காரணமாக, அவர்கள் தங்கள் வாழ்நாளில் சொந்த வீடு கனவை அடைய முடிவதே இல்லை. சொந்த வீடு கனவு உள்ளவர்கள் செய்யும் தவறுகள் என்ன? அவர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

பேராசை

வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என ஆசை இருப்பது எதார்த்தம் தான். வீட்டு ஓனர் என்ற கவுரத்துடன் வாழலாம். மற்றொருவர் வீட்டில் வாழும்போது அவர்கள் சொல்லும் ரூல்ஸ் எல்லாம் பின்பற்ற வேண்டும், இல்லையென்றால் உடனே வீட்டை காலி செய்துவிட வேண்டிய சூழல் தான் வரும். ஆனால், செய்யக்கூடிய தவறு என்னவென்றால்,  சொந்த வீடு கனவை பெரிதாக வைத்துக் கொள்வது தான். அது தவறில்லை என்றாலும் எல்லோராலும் நினைக்கு மாதிரியான வீடுகளை, நினைத்தில் நேரத்தில் கட்டிவிட முடியாது. 

பொருளாதார சூழல், குடும்ப சூழல், ஆரோக்கியம் எல்லாம் ஒத்துவராது. மேலும், நீங்கள் இப்போது வசிக்கும் இடத்தில் இருந்து இடம்பெயர வேண்டிய சூழல் கூட வரலாம். இருக்கும் இடத்திலேயே வீடு வாங்க வேண்டும் என்றால் பட்ஜெட் பிரச்சனையாக இருக்கும். இதனையெல்லாம் கருத்தில் கொண்டு சொந்த வீடு மட்டும் போதும் என ஆசையை சுருக்கிக் கொண்டு இருந்தால், உங்கள் கனவு நினைவேறும். ஆடம்பரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் கனவு கனவாகவே இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. 

மேலும் படிக்க | ஆயுஷ்மான் பாரத்... மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை... இந்த ஆவணங்கள் அவசியம்

பொருளாதார சூழல்

பலரும் செய்யக்கூடிய தவறு என்னவென்றால் தங்களின் பொருளாதார சூழல் குறித்து கவனத்தில் கொள்ளாமல், சொந்த வீட்டை ஆடம்பரமாக கட்ட வேண்டும் என்று நினைப்பது தான் அவர்களை வாடகை வீட்டிலேயே இருக்க வைக்கிறது. வீட்டில் யார் யாருக்கெல்லாம் ஊதியம் வருகிறது, அந்த சம்பளம் எந்தெந்த தேவைகளுக்காக நீங்கள் உபயோகப்படுத்துகிறீர்கள் என்பதை பட்டியல் போடுங்கள். ஒருவேளை கடன் வாங்கி வீடு கட்டினால் அதனை திரும்ப செலுத்த ஆகும் நேரம், காலம் உள்ளிட்டவை குறித்தெல்லாம் நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும். இதனை கணக்கில் கொள்ளவில்லை என்றால் நீங்கள் மிகப்பெரிய சிக்கலில் சிக்கிக் கொள்வீர்கள்.

கடன்

சொந்த வீடு கனவை நனவாக்குவதும் கடன் தான், அந்த கனவை நிர்மூலமாக்குவதும் கடன் தான் என்பதில் நீங்கள் தெளிவுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் உங்கள் வருவாய்க்கு ஏற்ப தான் கடன் வாங்க வேண்டும். 100 ரூபாய் சம்பாதிக்கிறீர்கள் என்றால் 30 ரூபாய்க்குள்ளாக மட்டுமே கடனுக்கு செலுத்தும் தொகை இருக்க வேண்டும். அதுவே அதிகம். அதனைவிடுத்து இதனை கருத்தில் கொள்ளாமல் சொந்த வீடு கடன் வாங்கி கட்டினால் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி மீண்டும் வாடகை வீட்டிலேயே வசிக்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள். 

ஆரோக்கியம்

சொந்த வீடு கட்ட தொடங்குவதற்கு முன்பு கருத்தில் கொள்ள வேண்டியது குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம். ஏனென்றால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மருத்துவ செலவு ஏதேனும் இருந்தால் அதனையும் கருத்தில் கொண்டே நீங்கள் சொந்த வீட்டுக்கு ஆகும் செலவை முடிவு செய்ய வேண்டும். அதனால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றால் தாராளமாக சொந்த வீடு கட்டலாம்.

மேலும் படிக்க | PMSBY: ரூ 20 செலுத்தினால் போதும்... மத்திய அரசின் ரூ 2 லட்சம் காப்பீடு கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News