அடுத்தாண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்ததில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் அதிக இடங்கள் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான இடஒதுக்கீடு பேச்சு வார்த்தை தொடங்கிவிட்டது. மத்தியில் ஆளும் பாஜக தற்போது பீகார் மாநில கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 38 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே வெற்றிப்பெற்றது. அதேவேலையில் பாஜக 21 இடங்களில் வெற்றி வாகை சூடியது.
இந்நிலையில் வரவிருக்கும் பொதுத்தேர்தலில் பாஜக தனக்கு 20 இடங்களை மட்டும் வைத்துக் கொண்டு ஐக்கிய ஜனதா தளத்துக்கு 12 இடங்களும், லோக் ஜனசக்தி கட்சிக்கு 6 இடங்களும் ஆர் எல் எஸ் பி கட்சிக்கு 2 இடங்களும் அளிக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தங்கள் கட்சிக்கு 17 இடங்களாவது ஒதுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இட ஒதுக்கீடு விவகாரம் தொடரப்பாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோரை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சந்தித்து சந்தித்துள்ளார். இச்சந்திப்பில் கிஷோர் பாஜக முடிவை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து நிதிஷ்குமாரின் நெருங்கிய நண்பரான நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இந்த விவகாரத்தில் தடையிட வாய்ப்புள்ளது என தெரிகிறது. ஐக்கிய ஜனதா தளம் விவகாரம் முடிந்த பின் அமித்ஷா லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும் ஆர் எல் எஸ் பி தலைவர் உபேந்திர குஷாவா ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார்.