சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி மகாராஷ்டிராவில் ஒரு நிலையான அரசாங்கத்தை அமைத்து மக்களுக்காக செயல்படும் என்று சிவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை அமைக்க பாஜக எடுத்த முடிவு தற்கொலைக்கு சமம் என நிரூபணமாகி உள்ளது. பாஜக கட்சியின் நம்பகத்தன்மை மீது கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.
மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்கலாம் எனத்தகவல் வந்துள்ளன. ஆனால் இதுக்குறித்து அதிகாரப்பூர்வ செய்தி எதுவும் வெளியாக வில்லை.
அரசியலமைப்பு தினத்தை நினைவுகூரும் வகையில் செவ்வாயன்று நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தை காங்கிரசும் வேறு சில எதிர்க்கட்சிகளும் புறக்கணிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது!
162 எம்.எல்.ஏ.க்களின் பலத்தை வெளிப்படுத்திய Shiv Sena-NCP-Congress கூட்டணி. அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சட்டசபையில் தங்கள் கட்சிக்கு ஆதரவாக தான் வாக்களிப்போம் என்று சத்தியம் செய்தனர்.
சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ஒன்றிணைத்து, இன்று இரவு 7 மணிக்கு தங்கள் வலிமையை வெளிப்படுத்துவோம் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
70,000 கோடி ரூபாய் பாசன ஊழலில், மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 20 FIR-களில் 9 கைவிடப்பட்டதாக தவகவல்கள் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா விவகாரம் தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் மக்களவையில் அமளியில் ஈடுப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மகாராஷ்டிராவில் அரசாங்க உருவாக்கம் தொடர்பாக நடந்து மிகப்பெரிய அரசியல் நாடகத்திற்கு மத்தியில், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வாத்ரா பாரதீய ஜனதா மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கியுள்ளார்!
திங்களன்று நடைபெறும் மாநிலங்களவை அமர்வில், மகாராஷ்டிரா பிரச்சினை குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்ப முடிவுசெய்துள்ளனர். இதன் காரணமாக சபை புயல் காட்சிகள் நிறைந்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.