மகாராஷ்டிரா: 162 எம்.எல்.ஏ.க்களின் பலத்தை வெளிப்படுத்திய Shiv Sena-NCP-Congress

162 எம்.எல்.ஏ.க்களின் பலத்தை வெளிப்படுத்திய Shiv Sena-NCP-Congress கூட்டணி. அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சட்டசபையில் தங்கள் கட்சிக்கு ஆதரவாக தான் வாக்களிப்போம் என்று சத்தியம் செய்தனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 25, 2019, 08:49 PM IST
மகாராஷ்டிரா: 162 எம்.எல்.ஏ.க்களின் பலத்தை வெளிப்படுத்திய Shiv Sena-NCP-Congress title=

மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் தினமும் ஒரு புதிய அதிசியம் நடந்து வருகிறது. இன்று (திங்கள்கிழமை) மாலை, தேசியவாத காங்கிரஸ் (Nationalist Congress Party) கட்சி, சிவசேனா (Shiv Sena), மற்றும் காங்கிரஸ் (Congress) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை ஊடகங்களுக்கு முன்னால் அணிவகுத்து வருகின்றன. மும்பையில் உள்ள ஹோட்டல் கிராண்ட் ஹையாட்டில் மூன்று கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களைத் தவிர, சமாஜ்வாடி கட்சி மற்றும் வேறு சில சிறிய கட்சிகள் மற்றும் சில சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை அணிவகுத்து வருகின்றனர். அனைத்து எம்.எல்.ஏக்களும் தங்கள் சட்டமன்றத் தொகுதி மற்றும் தங்கள் பெயர்களைக் கூறி வருகின்றனர். இது மட்டுமல்லாமல், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சட்டசபையில் தங்கள் கட்சிக்கு ஆதரவாக தான் வாக்களிப்போம் என்று ஹோட்டலில் சத்தியம் செய்தனர்.

எம்.எல்.ஏ.க்களின் அணிவகுப்பின் போது என்சிபி தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா காங்கிரஸ் (Congress) மாநிலத் தலைவர் பாலாசாகேப் தோரத் மற்றும் மூன்று கட்சிகளின் பல பெரிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அணிவகுப்பின் போது ஷரத் பவார் அவரது மகள் சுப்ரியா சுலேவுடன் இருந்தார். 162 எம்.எல்.ஏ.க்களில் ஆதித்யாவும் இருப்பதால், சிவசேனா சார்பாக ஆதித்யா தாக்கரே கலந்து கொண்டார். சிவசேனாவின் 56 எம்.எல்.ஏக்களில் 56 பேரும், காங்கிரஸின் 44 எம்.எல்.ஏக்களும், என்.சி.பி. கட்சியின் 54 எம்.எல்.ஏக்களில் சுமார் 52 எம்.எல்.ஏக்கள் அணிவகுப்பில் கலந்துக் கொண்டனர் என்று கூறப்படுகிறது. இது தவிர, சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.ஏ மற்றும் சில சுயேச்சைகளும் மூன்று கட்சிகளுக்கு ஆதரவாக உள்ளனர் என தகவல் கூறுகிறது.

 

சனிக்கிழமை காலை பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராகவும், என்.சி.பியின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றார். இது ​​சரத் பவார் மற்றும் அவரது மகள் சுப்ரியா சுலே மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் ஏமாற்றமடைந்தனர்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த NCP கட்சியின் தலைவர் சரத் பவார், பாஜகவை அஜித் பவார் ஆதரித்தது இருப்பது அவரது தனிப்பட்ட முடிவு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவு அல்ல என விளக்கம் அளித்தார். மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் அரசாங்க அமையா வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பாஜவுக்கு ஆதரவாக யார் சென்றார்கள்? யார் செல்லப் போகிறார்கள்? என்பது எங்களுக்குத் தெரியாது. நான் அவர்களுக்கு இரண்டு விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். கட்சி தாவல் தடை சட்டம் உள்ளது. எனவே அவர்களின் முயற்சிகள் வீணாகிவிடும் என எச்சரித்து இருந்தார். தற்போது அணிவகுப்பில் பங்கேற்ற என்சிபி எம்.எல்.ஏக்கள் கணக்கில் கொள்ளும் போது, சரத் பவார் வெற்றி பெற்றுள்ளார் என்பது வெளிப்படுகிறது. 

அதேபோல அவரது மகள் என்.சி.பி எம்.பி. சுப்ரியா சுலே தனது கட்சி மற்றும் குடும்பம் இரண்டையும் உடைத்துவிட்டதாக தெரிவித்திருந்தார். 

இன்று திங்கள்கிழமை மாலை, சுப்ரியா மற்றும் உத்தவ் இருவரும் ஹோட்டல் கிராண்ட் ஹையாட்டில் சிரித்தபடி காணப்பட்டனர். இரு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் முகத்தில் சிரிப்பைக் காண முடிந்தது. காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான அசோக் சவனும் மகிழ்ச்சியாக இருந்தார்.

இந்த அணிவகுப்பின் மூலம், சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ், தற்போதைய தேவேந்திர ஃபட்னாவிஸ் அரசாங்கம் சிறுபான்மையினராக இருப்பதைக் காட்ட முயற்சிக்கின்றன. இருப்பினும், ஊடகங்களின் முன் அணிவகுப்பு நடத்துவதால் நன்மை எதுவும் இல்லை. 

எந்தவொரு அரசாங்கமும் பெரும்பான்மை அல்லது சிறுபான்மையாக இருந்தால், அதை சட்டசபையில் மட்டுமே தீர்மானிக்க முடியும். மூன்று கட்சிகளும் தேவேந்திர ஃபட்னவிஸை தனது பெரும்பான்மையை விரைவாக நிரூபிக்குமாறு கேட்டுக் கொண்டாலும், அதை நிருபிக்க பாஜக கால அவகாசம் எடுத்துக்கொள்ள விரும்புகிறது. இந்த விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இரு தரப்பினரின் வாதங்களையும் நீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டதுடன், நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்குப் பிறகு அது குறித்து ஒரு முடிவை வழங்கும்.

முன்னதாக, சிவசேனா, காங்கிரஸ் மற்றும் என்.சி.பி கட்சிகள் கூட்டாக 162 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் ராஜ் பவனை அடைந்து அரசாங்கத்தை அமைப்பதற்கான கோரிக்கையை முன்வைத்தன. ஆனால் கவர்னர் மும்பையில் இல்லாததால், மூன்று கட்சிகளின் தலைவர்களும் ஆளுனரை சந்திக்க முடியவில்லை.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

 

Trending News