சிவசேனா டெல்லியில் ஆட்சியை பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார்!
மகராஷ்டிராவின் பரபரப்பான அரசியல் நிகழ்வுகளுக்கு மத்தியில் சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் செய்தியாளர்களிடன் இன்று பேசுகையில் இக்கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., மகாராஷ்டிராவில் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று நான் சொன்னபோது மக்கள் எங்களைப் பார்த்து சிரித்தார்கள், ஆனால் இப்போது நாங்கள் பாதுகாப்பாக மகாராஷ்டிரா செயலகத்தில் இறங்கியுள்ளோம். மேலும் ஒன்றை நான் உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்., சிவசேனா டெல்லியில் ஆட்சி அமைத்தாலும் ஆச்சரியப்பட வேண்டிய அவசியம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக., மகாராஷ்டிரா ஆட்சி குறித்த உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பினை அடுத்து மாநிலத்தில் முதல்வர் பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தார். இதனையடுத்து சிவசேனா தலைமையில் மூன்று கட்சிகளின் கூட்டணி ('மகா விகாஸ் அகதி') ஆட்சி தற்போது அமையவுள்ளது.
#WATCH Sanjay Raut, Shiv Sena: Maine kaha tha,'hamara surya yaan mantrale ke chhate manjil par safely land karega',tab sab hass rahe the. Lekin hamare surya yaan ka safe landing hogaya. Aane wale samay mein agar ye surya yaan Delhi mein bhi utre toh aapko aashcharya nahi hoga. pic.twitter.com/d5aWqpT4yu
— ANI (@ANI) November 27, 2019
தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் மற்றும் சிவசேனா தலைவர்கள் குழு செவ்வாய்க்கிழமை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. முன்னதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் மற்றும் சிவசேனா தலைவர்கள் குழு உத்தவ் தாக்கரே-வை முதல்வராக தேர்ந்தெடுக்கப் பட்டு இருப்பதாகவும், அவர் வரும் நவம்பர் 28-ஆம் நாள் மாலை 5 மணியளவில் முதல்வராக பதவியேற்பார் எனவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே ராஜ் பவனில் மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் இடைக்கால சபாநாயகராக பாஜக தலைவர் காளிதாஸ் கோலம்ப்கர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் இன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட MLA-க்களுக்கு அவர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நாளை முதல்வராக பதவியேற்கும் உத்தவ் தாக்கரேவுக்கு இருண்டு துணை முதவர்கள் நியமிக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது வரையிலும் இதுதொடர்பான முடிவு எடுக்கப்படவில்லை என காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரத் தெரிவித்துள்ளார். இருப்பினும் தாக்கரே பதவியேற்பு நாள் அன்று துணை முதல்வர், அமைச்சர்கள் சிலரும் பதவியேற்பர் என அவர் தெரிவித்துள்ளார்.