கால்நடை தீவனம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் லாலு பிரசாத் யாதவ், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாக RIMS மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது....!
4-வது மாட்டுத் தீவன ஊழல் வழக்கான தும்கா கருவூல மோசடி வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
லாலுவுக்கு எதிரான சி.பி.ஐ. கோர்ட்டு அளித்த தீர்ப்பினை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம் என லாலு பிரசாத் யாதவ் மகன் மகன் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
'கால்நடை தீவன ஊழல் வழக்கில், பீஹார் மாநில முன்னாள் முதல்வர், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும், 15 பேர் குற்றவாளிகள்' என, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளதையடுத்து இன்று தண்டனையையும் அறிவித்துள்ளது.
பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலுபிரசாத்தின் மகள் மிசா பாரதிக்கு சொந்தமான டெல்லி அலுவலகத்தில் அமலாக்கத்துறை கடந்தவாரம் அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் ரூ.8 ஆயிரம் கோடி பண மோசடி செய்ததாக தெரிய வந்தது.
இதேபோல் அவருடைய கணவர் ஷைலேஷ் குமார் மற்றும் பண மோசடியில் முக்கிய தொடர்பு உள்ளதாக கூறப்படும் மிஷைல் பிரிண்டர்ஸ் ஆகியவற்றின் அலுவலகங்களிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
லாலுபிரசாத் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்கில் சிபிஐ 12 இடங்களில் சோதனை நடத்திய மறுநாளில் அமலாக்கத்துறை இந்த சோதனையில் ஈடுபட்டது.
லாலு பிரசாத் ரயில்வேதுறை அமைச்சராக இருந்த போது ஓட்டல்களை மேம்படுத்தும் ஒப்பந்த்தில் முறைகேடு என சிபிஐ புகார். அவர், அவரது மனைவி, மகன் மீது வழக்கு!!
பீகார் மாநில முன்னால் முதல்வரும், முன்னால் ரயில்வே அமைச்சரும் ஆனா லாலு பிரசாத் யாதவின் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் என மொத்தம் 12 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை மற்றும் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.
லாலு பிரசாத் ரயில்வேதுறை அமைச்சராக இருந்த போது ஓட்டல்களை மேம்படுத்த ஒப்பந்த்தில் முறைகேடு என சிபிஐ புகார்.
பீகார் மாநில முன்னால் முதல்வரும், முன்னால் ரயில்வே அமைச்சரும் ஆனா லாலு பிரசாத் யாதவின் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் என மொத்தம் 12 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை மற்றும் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில், லாலு பிரசாத் யாதவின் ஜாமீனை சிபிஐ கோர்ட் நீட்டித்துள்ளது.
1990-ம் ஆண்டு பீகார் முதல் அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது, மாட்டுத்தீவன ஊழலில் சிக்கினார். இவர் 950 கோடி ரூபாய் ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, லாலு மீது ஊழல் வழக்குத் தொடரப்பட்டது.
இந்நிலையில் கடந்த 30-ம் தேதி இந்த வழக்குத் தொடர்பாக லாலுவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. மேலும் லாலு பிரசாத் யாதவ் ஜூன் 9-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என ராஞ்சி சிபிஐ சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.
திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழா மற்றும் 60 ஆண்டு கால சட்டமன்ற உறுப்பினர் பணியை கவுரவிக்கும் வகையில் சட்டப்பேரவை வைர விழாவும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.
விழா மேடை தமிழக சட்டப்பேரவை வடிவில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த விழாவுக்கு, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். முதன்மை செயலாளர் துரைமுருகன் அனைவரையும் வரவேற்றார்.
திமுக தலைவர் கருணாநிதியை இன்று அவரது இலத்தில் சந்தித்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின்.
திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது 94-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி கோபாலபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் மு.க.ஸ்டாலின் அவரை சந்தித்தார்.
கருணாநிதி பிறந்த நாளையொட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், கேரள ஆளுநர் சதாசிவம், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
கடந்த 1924-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தார். இளம் வயது முதல் பொது வாழ்வில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இன்று அவர் சட்டப்பேரவையில் அடியெடுத்து வைத்து 60 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாகவும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வைரவிழா:-
ரூ.1000 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கு தொடர்பாக ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத்தின் மகளுமான, எம்.பி.யுமான மிஸா பாரதி மற்றும் அவரது கணவர் சைலேஷ் குமார் ஆகியோருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் ரூ.1000 கோடி மதிப்பிலான நிலங்கள் பினாமி பெயரில் அவரது குடும்பத்தினருக்கு கைமாறியதாக பாஜக அண்மையில் குற்றம்சாட்டியது. மேலும், இந்த நிலங்கள் யாவும் லாலுவின் மகள் மிஸா பாரதி உள்பட அவரது குடும்பத்தினர் இயக்குநர்களாக அங்கம் வகிக்கும் சில போலி நிறுவனங்களின் பெயரில் பதிவாகியிருப்பதாகவும் கூறப்பட்டது.
ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் மற்றும் அவரது மகன்கள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறது.
போலி நிறுவனங்கள் மூலம் ரூ.1000 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக லாலு பிரசாத் யாதவ் மீது எழுந்த புகார் தொடர்பாக டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ரேவாரி, குர்கான் உள்ளிட்ட 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.