கால்நடை தீவனம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் லாலு பிரசாத் யாதவ், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாக RIMS மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது....!
பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மீது கால்நடை தீவனம் கொள்முதல் செய்ததில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் தற்போது லாலு பிரசாத் யாதவ் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். உடல்நலக்குறைவு காரணமாக தற்போது ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில்,லாலு பிரசாத் யாதவ் மன அழுத்தத்தில் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் ராஞ்சி மருத்துவமனை மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராஞ்சியிலுள்ள ராஜேந்திரா மருத்துவ கல்வி மருத்துவமனை இயக்குநர் ஆர்.கே. ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், லாலுவின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மன அழுத்தத்தில் இருப்பதாக அறிக்கை அளித்துள்ளனர். இதேபோல், லாலுவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருப்பதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவும் அறிக்கை அளித்திருந்தது" என்றார். லாலுவை விரைவில் மனநல மருத்துவர்கள் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.