3_வது மாட்டு தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவுக்கு 5 வருட சிறை தண்டனை

3_வது மாட்டு தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு 5 வருட சிறை தண்டனை விதித்து ராஞ்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

Last Updated : Jan 24, 2018, 02:30 PM IST
3_வது மாட்டு தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவுக்கு 5 வருட சிறை தண்டனை title=

3_வது மாட்டு தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு 5 வருட சிறை தண்டனை மற்றும் 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து ராஞ்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முன்னால் பீகார் முதல்வர் ஜகன்நாத் மிஸ்ராவுக்கு 5 வருட சிறை தண்டனை மற்றும் 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து ராஞ்சி நீதிமன்றம்.

 

 

 


மாட்டு தீவன ஊழல் தொடர்பான 3வது வழக்கிலும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் ''லாலு பிரசாத் யாதவ்''-க்கு குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், தண்டனை விபரம் மதியம் இரண்டு மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.

 

 


மாட்டு தீவன ஊழல் தொடர்பான 3வது வழக்கிலும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ்க்கு குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், தண்டனை விபரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது.

பீஹார் முதல்வராக, 1994 -1996-ல் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத் யாதவ் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்து முதல்-மந்திரி ஆனார். அப்போது, கால்நடை தீவனம் வாங்கியதாக போலி பில்கள் கொடுத்து, அரசு கருவூலத்தில் பணம் எடுத்து, மோசடி நடந்ததாக புகார்கள் எழுந்தன.

இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தியது.ராஞ்சி சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சிவ்பால் சிங், கடந்த ஆண்டு டிசம்பரில் தீர்ப்பளித்தார். அப்போது, 'லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி' என, நீதிபதி அறிவித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும், 15 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இதையடுத்து, அவர் ராஞ்சியில் இருக்கும் பிஸ்ரா முண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், லாலு மீதான மற்றொரு மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான மற்றொரு வழக்கு, இன்று சி.பி.ஐ சிறப்பு கோர்ட் முன் இன்று விசாரணைக்கு வந்தது. இதிலும் லாலு பிரசாத் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ளது.  

மேலும், இந்த வழக்கு தொடர்பாக லாலுவுக்கு வழங்கப்படும் தண்டனை விபரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது. மாட்டு தீவன ஊழல் விவகாரத்தில் லாலுவிற்கு எதிராக 3வது முறையாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News