பெங்களூருவில் (Bengaluru), குறிப்பாக கொரோனா (Corona) தொற்று அதிகம் உள்ள KR மார்கெட் மற்றும் அதன் அருகில் உள்ள சித்தபுரா, விவிபுரம், கலசிபால்யா ஆகிய இடங்களில் கடுமையாக லாக்டவுனை அமல்படுத்த வேண்டும் என கர்நாடக (Karnataka) முதல்வர் பி. எஸ். எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
கர்நாடக முதல்வர் BS எடியூரப்ப-வில் அலுவலக ஊழியர் ஒருவின் உறவினருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளத்தை அடுத்து கர்நாடக முதல்வரின் அலுவலகம் கிருமிநாசினிக்காக அடைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் 19 மாநிலங்களவை தேர்தலில், கர்நாடகாவிலிருந்து பாரதீய ஜனதா தனது வேட்பாளர்களாக எரன்னா கடாடி மற்றும் அசோக் காஸ்தி களமிறங்கவுள்ளனர். இந்நிலையில் JD(S) தரப்பில் இருந்து முன்னாள் பிரதமர் HD தேவேகவுடாவை களமிறங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகின் மிகப்பெரிய ரயில்வே தளம் நாட்டில் கட்டப்பட்டு வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தளத்தின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த தளம் தயாராக இருக்கும் எனவும் ரயில்வே தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு எதிரான போரில் வீரர்களுக்கான உடைகள் அணியாத போர் வீரர்களாக உள்ள நமது மருத்துவ பணியாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என பிரதமர் மோடி பெருமிதம்..!
மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, ஆரஞ்சு மற்றும் சிவப்பு மண்டலங்களில் திங்கள்கிழமை (ஜூன் 1) முதல் ஓட்டுநர் உரிமங்கள் (DL) மற்றும் கற்பவரின் உரிமங்களை (LL) மறுதொடக்கம் செய்ய கர்நாடக போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.
கொடிய நாவல் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலத்தில் இருந்து எந்தவொரு பயணியையும் அனுமதிக்க இயலாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த 3D ஓவிய கலைஞர் நஞ்சுந்தசாமி மற்றும் நடிகை சம்யுக்தா ஹார்னாட் ஆகியோர் நகரில் வரைபடங்கள் வரைந்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
காங்கிரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், PM Care Funds எதிராக பகிரப்பட்ட ட்வீட் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது கர்நாடகாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் கர்நாடகாவிலிருந்து ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் புறப்படுகையில் சில புலம் பெயர்ந்த குழந்தைகளுக்கு சன்னப்பட்டன பொம்மைகளை பரிசளிப்பதன் மூலம் தென்மேற்கு ரயில்வே (SWR) மண்டலம் அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் புதிதாக 63 கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய வழக்குகளுடன் சேர்த்து மாநிலத்தில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 1,458-ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களில் வசிக்கும் கர்நாடக பிரஜைகள் வரும் மே 31 வரை மாநிலத்திற்குள் வர தடை செய்யப்பட்டுள்ளதாக கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.