கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்புபடுத்தி பேசியதாக பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் மன்னிப்பு கேட்குமாறு வழக்கறிஞர் வில்சன் மூலம் நோட்டீஸ்.
Kallakurichi Illicit Liquor Case: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான சிவகுமார் என்பவரை சென்னையில் போலீசார் கைது செய்தனர்.
மக்களின் உரிமைக்காக போராடும் கட்சி எனக் கூறிக் கொள்ளும் கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் இத்தனை மரணங்கள் நிகழ்ந்தும், இதுவரை அமைதி காப்பது ஏன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி.
Edappadi Palanisamy: கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு அளிக்கப்படும் விஷ முறிவு மருந்து தட்டுப்பாடு குறித்து நான் கூறியதற்கு, அந்த மருந்துக்கு பதிலாக தவறாக வேறொரு மருந்து குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி நேற்று முன்தினம் மெத்தனால் கலந்த விச சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்த சம்பவம் தமிழக மட்டுமல்லாது இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கள்ளச்சாராயத்தால் ஒரு ஊரே சுடுகாடாக மாறியுள்ளது. கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரத்தில் ஆம்புலன்ஸ்களின் சத்தமும், குடும்பத்தினரை இழந்து உறவினர்கள் அழும் மரண ஓலமும் தான் கடந்த இரண்டு நாட்களாக கேட்டுக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து எரியும் சுடுகாடும், அடுத்தடுத்து அடக்கம் செய்ய காத்திருக்கும் உடல்களின் வீடியோவும் நெஞ்சை நடுங்க செய்கிறது.
விஷச் சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
கள்ளச்சாராயம் விற்பனையில் இத்தனை பேர் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்திருக்கும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன், காவல்துறை அரசியல் பாரபட்சமற்ற கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
Kallakurichi Illicit Liquor Tragedy: கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து நடிகர் சூர்யா மெளனம் கலைத்துள்ளார். ’இனி ஒரு விதி செய்வோம்..! அதை எந்நாளும் காப்போம்!’ எனத் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Kallakurichi Liquor Death: தமிழக முழுவதும் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோரி இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் நிலையில், இத்தனை உயிரிழப்புகளுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே காரணம் என மருத்துவர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Kallakurichi District Collector : கள்ளக்குறிச்சி கருனாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளாச்சாராயம் குடித்து மக்கள் கொத்துக் கொத்தாக இறந்து கொண்டிருப்பதற்கு முன்னாள் மாவட்ட ஆட்சியர் கூறிய பொய் தான் காரணமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.