கள்ளக்குறிச்சி கருனாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் நிலையில் சிகிச்சையில் இருக்கும் 100க்கும் மேற்பட்டோரில் 30 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றிருக்கும் எம்எஸ் பிரசாந்த் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, சிகிச்சையில் இருப்பவர்களில் 50க்கும் மேற்பட்டோர் சீராக இருக்கும் நிலையில், 30 பேரின் உடல்நிலை பல்வேறு காரணங்களால் மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். அவரின் இந்த தகவல் மக்கள் மத்தியில் இன்னும் பீதியை கிளப்பியிருக்கும் நிலையில், இவ்வளவு உயிரிழப்புக்கு காரணம் முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஸ்வரன்குமார் ஜடாவத் அளித்த தவறான பேட்டியே காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
மேலும் படிக்க | தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்தது ஏன்? வரலாறும் பின்னணியும்
கருனாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முதல்கட்டமாக 5 பேர் உயிரிழந்தனர். அப்போதே அவர்களின் இறப்புக்கு கள்ளச்சாராயம் தான் காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்த நிலையில், மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்வரன் குமார் ஜடாவத் அவர்களின் உயிரிழப்புக்கு கள்ளச்சாராயம் காரணமல்ல, அப்படியான மருத்துவ அறிக்கையை மருத்துவர்கள் கொடுக்கவில்லை என தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரே கள்ளச்சாராயம் காரணம் அல்ல என பேட்டியளித்ததால், கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் உயிரிழப்புக்கு சென்றவர்களும் அங்கு விநியோகம் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர்.
இதன் காரணமாக கொத்துக் கொத்தாக மக்கள் வயிற்றுவலி, வாந்தி, தலைவலி, கண்பார்வை இழப்பு என பாதிக்கப்பட்டு சாரை சாரையாக சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஏற்கனவே 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மேலும் 30 பேரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் கவலைக்கிடமாக இருக்கிறது.
ஒருவேளை மாவட்ட ஆட்சியர் துரிதமாக செயல்பட்டு கள்ளச்சாராயம் குறித்து முன்கூட்டியே தெரிவித்திருந்தால் அல்லது மவுனமாக இருந்திருந்தால் கூட, மக்கள் மத்தியில் கள்ளச்சாராயத்தால் தான் இறந்தார்கள் என்ற தகவல் பரவி மேலும் குடிக்காமலாவது இருந்திருப்பார்கள். ஆனால் மாவட்ட ஆட்சியரே கள்ளச்சாராயம் காரணம் அல்ல என தெரிவித்ததன் விளைவு, இத்தனை பேர் இறப்புக்கு காரணமாகிவிட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. இது குறித்து பாமக மூத்த தலைவர் ராமதாஸ் தெரிவித்திருக்கும் கருத்தில், அரசை காப்பாற்ற மாவட்ட ஆட்சியரே பொய் சொல்லியிருக்கிறார் என விமர்சித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ