பி.எஸ்.எல்.வி. சி-38 ராக்கெட் மூலம் ‘கார்ட்டோசாட்– 2இ’ செயற்கைகோளை நாளை காலை 9.29
மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட் டவுண் தொடங்கியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை தயாரித்து விண்ணில் செலுத்தி சாதனை படைத்து வருகிறது.
அந்தவகையில், நாளை 31 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-38 ராக்கெட் விண்ணில் சீறிப்பாயும்.
வான்வழி மற்றும் கடல் போக்குவரத்து தொடர்பான தகவல்களை பெறும் வகையில் இந்த செயற்கை கோள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
2014-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருது, இஸ்ரோ நேற்று வழங்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இவ்விருதை வழங்க, இஸ்ரோ சார்பில் அதன் தலைவர் கிரண் குமார் பெற்றுக் கொண்டார்.
நினைவுப் பரிசு, ரூ.1 கோடி பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கொண்ட இவ்விரு துக்கு, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையிலான தேர்வுக்குழு இஸ்ரோவை தேர்வு செய்தது.
2015-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருதை, அகதிகள் மறுவாழ்வு ஐ.நா. ஆணையருக்கு மன்மோகன் கடந்த ஆண்டு வழங்கினார்.
தெற்காசிய நாடுகளுக்கான ஜிசாட் 9 செயற்கைக்கோள் இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து மாலை 4:57 மணிக்கு ஜிஎஸ்எல்வி எஃப் 9 ராக்கெட் மூலம் ஜிசாட் செயற்கைக்கோளை விண்ணில் நிறுத்த இஸ்ரோ திட்டமிட்டது. ஸ்ரீஹரிக்கோட்டாவில் சதிஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. தெற்காசிய நாடுகளின் பயன்பாட்டிற்காக ஜிசாட் 9 செயற்கைக்கோளை 253 கோடி ரூபாய் செலவில் இந்தியாவே தயாரித்துள்ளது.
தெற்காசிய நாடுகளுக்கான ஜிசாட் 9 செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து மாலை 4:57 மணிக்கு ஜிஎஸ்எல்வி எஃப் 9 ராக்கெட் மூலம் ஜிசாட் செயற்கைக்கோளை விண்ணில் நிறுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
ஸ்ரீஹரிக்கோட்டாவில் சதிஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. தெற்காசிய நாடுகளின் பயன்பாட்டிற்காக ஜிசாட் 9 செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.
விண்வெளி ஆய்வில் இந்தியாவின் சாதனையை கண்டு அமெரிக்கா வியப்படைந்துள்ளது.
இந்தியா விண்வெளி ஆய்வில் பல புதிய சாதனைகளை அடுத்தடுத்து படைத்து வருகிறது.உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செயற்கைகோள்கள், ராக்கெட்டுகள், ராக்கெட்டுகளை இயக்கும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கிரயோஜனிக் என்ஜின்களை சொந்தமாக உருவாக்கி, விண்வெளி ஆய்வு துறையில் வெற்றிகொடி நாட்டிவரும் இந்தியா, உள்நாட்டு தேவைக்காக மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு சொந்தமான பல்வேறு வகையான செயற்கை கோள்களையும் இங்கிருந்தபடி விண்ணில் செலுத்தி உலக நாடுகளின் கவனத்தை கவர்ந்து வருகிறது.
இன்று பி.எஸ்.எல்.வி. - சி 35 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வானிலை நிலவரத்தை முன்கூட்டியே அறியக்கூடிய, அதிநவீன, 'ஸ்கேட் சாட் 1' செயற்கை கோளுடன் இன்று காலை 'பி.எஸ்.எல்.வி., - சி 35' ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
வானிலை சம்பந்தமான ஆராய்ச்சி மேற்கொள்ள செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ ஜி.எஸ்.எல்.வி. எப்-05 என்ற ராக்கெட் மூலம் இன்சாட்-3டி.ஆர். எனும் வானிலை ஆய்வுக்காக செயற்கைக்கோளை செலுத்த இருந்தது.
அதன்படி ஆந்திரா மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து, இன்று மாலை 4.10 மணிக்கு இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட தயாராக வைக்கப்பட்டது..
வானிலை சம்பந்தமான ஆராய்ச்சி மேற்கொள்ள இன்று செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ ஜி.எஸ்.எல்.வி. எப்-05 என்ற ராக்கெட் மூலம் இன்சாட்-3டி.ஆர். எனும் வானிலை ஆய்வுக்காக செயற்கைக்கோளை செலுத்த உள்ளது.
அதன்படி ஆந்திரா மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து, இன்று மாலை இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இஸ்ரோ வரலாற்றில் முதல்முறையாக, 20 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி34 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று 20 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-34 ராக்கெட் விண்ணில் இன்று காலை 9.26 ஏவப்பட்டது. இதற்கான 48 மணிநேர கவுன்ட்டவுன் மாதம் 22-ம் தேதி காலை 9.26 மணிக்கு தொடங்கியது.
இந்திய விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளாக தீவிர முயற்சிக்கு பின் உருவாக்கப்பட்ட விண்கலம் விண்ணில் செலுத்தி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அமெரிக்கா மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த தொழில்நுட்பம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறுப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.