ரிசோர்ஸ்சாட்-2ஏ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

ரிசோர்ஸ்சாட்-2ஏ செயற்கைகோள் இன்று வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

Last Updated : Dec 7, 2016, 12:41 PM IST
ரிசோர்ஸ்சாட்-2ஏ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது title=

சென்னை: ரிசோர்ஸ்சாட்-2ஏ செயற்கைகோள் இன்று வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து ரிசோர்ஸ்சாட்-2ஏ செயற்கைக்கோள் இன்று காலை (பி.எஸ்.எல்.வி-சி36) ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுன் இன்று காலை 10.25 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. 

இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 817 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பப்பட்டது. அதில் இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் எடுக்க உதவும் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. புவியை கண்காணிக்கை, இயற்கையை படம் பிடிக்க என மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கடந்த 2003-ம் அண்டு ரிசோர்ஸ் சாட்-1 செயற்கைக்கோளையும், 2011-ம் ஆண்டு ரிசோர்ஸ் சாட்-2 செயற்கைக்கோளையும் இஸ்ரோ விண்ணில் ஏவியது. இதையடுத்து ரிசோர்ஸ் சாட்-2ஏ செயற்கைக்கோளை ஏவ இஸ்ரோ திட்டமிட்டது. இதனை 1,235 கிலோ எடையில், புவியை கண்காணிக்க மற்றும் தொலை உணர்வுக்காக தயாரிக்கப்பட்டது.

5 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இந்த செயற்கைக்கோள் மூலம், புவியில் உள்ள இயற்கை வளங்களை துல்லியமாக படம்பிடிக்க உதவுகிறது.  

Trending News