ஜிசாட் 9 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

Last Updated : May 5, 2017, 06:40 PM IST
ஜிசாட் 9 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது title=

தெற்காசிய நாடுகளுக்கான ஜிசாட் 9 செயற்கைக்கோள் இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து மாலை 4:57 மணிக்கு ஜிஎஸ்எல்வி எஃப் 9 ராக்கெட் மூலம் ஜிசாட் செயற்கைக்கோளை விண்ணில் நிறுத்த இஸ்ரோ திட்டமிட்டது. ஸ்ரீஹரிக்கோட்டாவில் சதிஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. தெற்காசிய நாடுகளின் பயன்பாட்டிற்காக ஜிசாட் 9 செயற்கைக்கோளை  253 கோடி ரூபாய் செலவில் இந்தியாவே தயாரித்துள்ளது.

தெற்காசிய நாடுகளில் பாகிஸ்தானை தவிர, மற்ற நாடுகளின் கூட்டு முயற்சியில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. 2,230 எடை கொண்ட இந்த ஜிசாட் 9 செயற்கைக்கோள், தகவல் தொடர்புக்கு உதவும் கருவிகளை சுமந்து கொண்டு விண்ணில் பாய்ந்தது.

 

 

சார்க் நாடுகளுக்காக வடிவமைபக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள் ஆகும். இயற்கை பேரிடர் கண்கானிப்பு, தொலை தொடர்பு குறித்த தகவல் பரிமாற்றம் ஆகியவற்றை சார்க் நாடுகள் மத்தியில் மேம்படுத்த உதவும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2014ம் ஆண்டு மங்கல்யான் விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை கொண்டாடிய கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி சார்க் நாடுகளுக்காக இஸ்ரோ சார்பில் ஒரு செயற்கைக்கோள் அனுப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அவரின் வேண்டுகோளை ஏற்று இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ள இந்த பணிக்கு, ராக்கெட் புறப்பட்ட 15-வது நிமிடத்திலேயே பிரதமர் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

 

 

Trending News