சிரியாவில் போர் நிறுத்தத்தை மீறிக் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் சிரியா விமானத் தாக்குதலை மேற்கொண்டது. இதில் 34 பொது மக்கள் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று, ரஷியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றப்பயணம் மேற்கொண்டார்.
இன்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து மூத்த அதிகாரிகள் வழியனுப்பி வைக்க, பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். முதலாவதாக பிரதமர் ஜெர்மனிக்கு செல்கிறார்.
ஜெர்மனி பயணத்தை முடித்து விட்டு நாளை ஸ்பெயின் நாட்டுக்கு புறப்பட்டு செல்கிறார். பிறகு 31-ம் தேதி ரஷியாவுக்கு செல்கிறார். அங்கு 18_வது இந்தியா, ரஷியா உச்சிமாநாடு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பிரான்ஸின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் கன்சர் வேடிங் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், வலது சாரி தலைவர் மரின் லீ பென், லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான், மற்கீம் இடது சாரிகள் சார்பில் ஜீன்-லக் மெலன்சான் ஆகிய 4 பேர் போட்டியிடுகின்றனர்.
இன்று ஓட்டுபதிவுக்காக பிரான்சில் முக்கிய இடங்களில் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பிரெஞ்ச் காலனி நாடுகளிலும், வெளி நாடுகளில் உள்ள பிரான்ஸ் தூதரகங்களிலும் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பாரிஸில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள சாம்ப்ஸ் எலிஸில் பகுதியில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் போலீஸ் அதிகாரிகள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக உள்துறை அமைச்சகம் இதுவரை எந்தவொரு தகவலும் தெரிவிக்கவில்லை.ஆனால், இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளான தயே பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் நாட்டின் நிஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு பாஸ்டில் தின கொண்டாட்டங்களின்போது கூட்டத்தினர் மீது பயங்கரவாதி ஒருவன் லாரியை மோதி தாக்குதல் நடத்தியதில் 84 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் உலகமெங்கும் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு உலகத்தலைவர்கள் பலரும் பெரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
15-வது ஐரோப்பிய கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. 2-வது அரை இறுதியில் உலக சாம்பியன் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் மோதின. இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டம் விறு விறுப்பாக இருந்தது.
மினி உலகக் கோப்பை என அழைக்கப்படும் ஐரோப்பிய கால்பந்து கோப்பை போட்டி தொடங்கயுள்ளது. இந்த தொடரில் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் மட்டுமே கலந்து கொள்ளும்.
உலகக் கோப்பையை போலவே இந்த தொடரும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2012 -ம் ஆண்டு நடந்த போட்டியில் ஸ்பெயின் சாம்பியன் பட்டம் பெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.