சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக, அந்நாட்டு கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். இவர்களை ஒடுக்கும் வகையில் சிரியா ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பொதுமக்கள், குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டு உள்ளனர். இதற்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது.
சிரியா அரசின் கொடூர தாக்குதல்: அப்பாவி குழந்தைகளின் மரணம்!
இந்நிலையில், சிரிய அரசு டோமாவில் ரசாயனத் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் 100-க்கு மேற்ப்பட்டோர் பலியாகி உள்ளனர். கிட்டத்தட்ட 700 பேர் காயம் அடைந்துள்ளதாக, அங்கு உள்ள மருத்துவக்குழு தெரிவித்தது.
சிரியா போர்: கொத்துக்கொத்தாக மடியும் அப்பாவி பொது மக்கள்
இச்சம்பவத்திற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம், "சிரியா அரசு நடத்தும் ரசாயனத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் எனப் பலரும் பலியாகியுள்ளனர். இது மிக கொடூரத் தாக்குதல். இந்த தாக்குதலுக்கு மனித மிருகமான சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத் மற்றும் ரஷ்யா அதிபர் பொறுப்பேற்க வேண்டும். ரசாயனத் தாக்குதல் நடத்தியதற்கு பெரும் விளைவுகளை கொடுக்க வேண்டி இருக்கும் என கூறியிருந்தார். மேலும் அமெரிக்கா தனது போர்க்கப்பல் குழு ஒன்றை சிரிய கடற்கரைப் பகுதிக்கு அனுப்பியிருந்தது.
சிரியாவை தாக்கும் அமெரிக்க ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவோம் -ரஷ்யா
இதற்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. சிரியா மீது அமெரிக்கா ஏதேனும் ஏவுகணைகளை ஏவினால், அதனை சுட்டு வீழ்த்துவோம். சிரியாவை காப்பது தங்களுக்கு உரிமை உள்ளதாக கூறியிருந்தது.
இந்நிலையில், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து சிரியா மீது தாக்குதல் நடத்த அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். எனவே சிரியாவின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் தொடங்கப்பட்டு உள்ளது.