தமிழகத்துக்கு காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதனால் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு ஆலோசனை.
இன்று உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காச நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கான பல்வேறு நலத்திட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (27.10.2017) புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
அதைக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (27.10.2017) புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள 316 உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 100 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
தமிழக காவல்துறையில் 4 திருநங்கைகளுக்கு பணி வாய்ப்பு அளித்து முதல்வர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்!
Chennai: Tamil Nadu CM Edappadi K. Palaniswami gave appointment order to four transgenders for joining TN police force pic.twitter.com/oHurueo5Ds
— ANI (@ANI) October 16, 2017
தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (13.9.2017) முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ள 1013 உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 10 நபர்களுக்கு உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
அதைக்குறித்து தமிழக அரசு இதழில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
கனடா நாட்டில் நடைபெற்ற உயரம் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பாராட்டி உள்ளார்.
அதைக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 77 தமிழக மீனவர்கள் இன்று தாயகம் திரும்புகிறார்கள்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 77 தமிழக மீனவர்களை நேற்று இலங்கை அரசு விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இன்று தாயகம் திரும்புவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
தமிழக அமைச்சரவையில் எந்த மாற்றமும் இல்லை என தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஏற்காடு கோடை விழாவை தொடக்கிவைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் :-
மாட்டிறைச்சி விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது குறித்து அரசாணை வந்தபிறகுதான் சரியான பதில் சொல்ல முடியும். மக்களிடத்தில் செல்வாக்கு மிக்க, மக்களுக்கு உழைத்து மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப் படம் சட்டப் பேரவையில் திறக்கப்படும். இதில் எந்தவித தவறும் இல்லை.
மேலும் கட்சியின் வளர்ச்சிப் பணியைப் பற்றி பேச மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை சென்னையில் திங்கள்கிழமை கூட்டுகிறோம்.
குடியரசு தலைவர், துணை ஜனாதிபதி, பிரதமர், மக்களவை சபாநாயகர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மட்டுமே சிவப்பு சுழல்விளக்கு பொறுத்த அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது. மேலும் விஐபி-களுக்கு இந்த சலுகை கிடையாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.