இரட்டை இலை சின்னம் யாருக்கு என்று இழுப்பறி நிலவி வந்த வேளையில், எடப்பாடி அணிக்கே இரட்டை இலை சின்னம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
நேற்று திடிரென தினகரன் அணியை சேர்ந்த அவரது ஆதரவு எம்.பிக்களான கோகுல கிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த் மூன்று பேரும் முதல்வர் பழனிசாமியை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று திண்டுக்கல் எம்.பி எம். உதயகுமார் மற்றும் வேலூர் எம்.பி.,செங்குட்டுவன் ஆகிய இருவரும் முதல்வர் பழனிசாமியை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
Tamil Nadu: TTV Dinakaran faction's Dindigul MP M Udhay kumar and Vellore MP Senguttuvan met CM Edappadi K. Palaniswami and extended their support #AIADMK
— ANI (@ANI) November 28, 2017
முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்த 5 எம்.பிக்களுமே, இரட்டை இலை சின்னம் கிடைத்தில் மகிழ்ச்சி, அதனால் தான் முதல்வரை சந்தித்து ஆதரவு அளித்தோம் எனக் கூறியுள்ளனர்.
அடுத்தடுத்து எம்.பிக்ககள் முதல்வர் பழனிசாமி அணிக்கு அதரவு தெரிவித்து வருவதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.