தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் 157 நிமிடம் பட்ஜெட் உரை நிகழ்த்தியுள்ளார். காலை 10.30 மணிக்கு தொடங்கிய உரை 1.30 மணிக்கு முடித்தார் ஓ.பி.எஸ்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க திமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.
2018-19 ஆம் நிதியாண்டின் பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்தார் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்
தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி; செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி, பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி. ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ.20 கோடி ஒதுக்கீடு. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ரூ. 1,361.60 கோடி நிதி ஒதுக்கீடு. காவல்துறைக்கு ரூ. 7,877 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது போன்ற பல அறிவிப்புகளை தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார்.
TN Budget 2018: முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!
இந்நிலையில், அதிமுக அரசு தாக்கல் செய்த 2018-19 ஆம் நிதியாண்டின் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் கூறியது,
தமிழகத்தில் மோசமான நிதி நிலைமை காரணமாக மாநிலத்தின் பல பணிகள் ஸ்தம்பித்துள்ளது. அப்படி இருக்கையில் தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓட்டை பானையில் சமையல் செய்ய முயற்சித்து இருக்கிறது அதிமுக அரசு. இன்றைய பட்ஜெட் மக்களை ஏமாற்றும் பட்ஜெட் என கருத்து தெரிவித்துள்ளார்.