WHO பிராந்திய இயக்குனர் டாக்டர் மட்ஷிடிசோ மொய்ட்டி மார்பர்க் வைரஸ் குறித்து கூறுகையில், மார்பர்க் வைரஸ் தொற்று வேகமாக பரவுகிறது என்றும், அதன் நோய்த்தொற்றின் இறப்பு விகிதம் 88 சதவீதம் வரை இருக்கலாம் எனவும் எச்சரித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், விஞ்ஞானிகள் ஒரு புதிய கொடிய வைரஸ் குறித்து எச்சரித்துள்ளனர். இது மனிதர்களுக்கு ஆபத்தானது என்றும் கொரோனாவை விட வேகமாக பரவக்கூடியது என்றும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட எலி, அதன் சிறுநீர் மற்றும் நீர்த்துளிகளுடன் ஏற்படும் நேரடி தொடர்பு மூலம் இந்த கொடிய வைரஸ் பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபருடனான தொடர்பு மூலமும் இந்த வைரஸ் பரவுகிறது.
ஜூன் 1 ம் தேதி எபோலா பரவுவதாக அதிகாரிகள் அறிவித்ததிலிருந்து, காங்கோவின் ஈக்வெட்டூர் மாகாணத்தில் 48 தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன, மேலும் மூன்று தொற்றுகள் மற்றும் மொத்தம் 20 இறப்புகள் உள்ளன என்று WHO இன் உயர் அவசர நிபுணர் மைக் ரியான் தெரிவித்தார்.
உலகச்சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குநர், டெட்ரோஸ் அதனம் கேப்ரியேசஸ், காங்கோவில் இரண்டாவது முறையாக எபோலா பரவல் தொடங்கியுள்ளதை சுகாதார அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளதாக கூறினார். காங்கோவில், நீண்ட காலமாக இருந்து வரும் எபோலா தொற்று இறுதி கட்டத்தை அடைந்து விட்ட நிலையில், உலக சுகாதார அமைப்பின்இந்த அறிவிப்பு பீதியை கொண்டு வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.