தெலங்கானாவில் உள்ள விகராபாத் மாவட்டத்தில் துடியாலா பகுதியில் ஃபார்மா சிட்டி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில், சமரசம் பேசுவதற்காக சென்ற ஆட்சியரை தாக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
திருவண்ணாமலையில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் மனைவியை எட்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து, கிருஷ்ணகிரி மாவட்ட காட்டு பகுதியில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் உடல் பாகங்களை தேடும் பணியில், போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அடுத்தடுத்து 2 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதிலும் ஒரு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
பெங்களூருவைச் சேர்ந்த சோஷியல் மீடியா influencer ஒருவர் சிறுவன் ஒருவரால் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியை தற்போது காணலாம்.
சீர்காழி அருகே பழையாறு மீனவ கிராமத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்த நிலையில், மின்கம்பிகள் அறுந்து விழும் தறுவாயில் இருந்ததே விபத்துக்கான காரணம் என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆம்பூரில் உள்ள பிரபல பிரியாணி ஓட்டலில் குழந்தைகள் சாப்பிட்ட பிரியாணியில் புழு இருந்ததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ஹோட்டல் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை அமைந்தகரையில், வீட்டில் பணிபுரிந்த 16 வயது சிறுமியை அடித்துக் கொலை செய்துவிட்டு, துர்நாற்றம் வீசாமல் இருக்க வாசனை திரவியங்களை தெளித்துவிட்டு சென்றதாக கூறப்படும் குடும்பத்தை காவல்துறையினர் கூண்டோடு கைது செய்துள்ளனர். கொலைக்கான பரபரப்பு பின்னணி.
Chennai Crime News: அமைந்தக்கரையில் வீட்டில் வேலை பார்த்து வந்த 16 வயது சிறுமியை வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி அடித்து கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவையில் தனக்கு சூப்பர் பவர் இருப்பதாக நினைத்து கல்லூரி விடுதியின் 4 வது மாடியில் இருந்து குதித்த மாணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
பார்ப்பதற்கு நீதிபதி போல தெரியும் இவர்தான் குஜராத்தை சேர்ந்த போலி நீதிபதி மோரிஷ் சாமுவேல். இவர் 5 வருடமாக போலி நீதிமன்றம் நடத்திய நிலையில் எப்படி சிக்கினார் என்பதை பார்க்கலாம் இந்த தொகுப்பில்
Madurai Crime News: மதுரையில் கணவருடன் தீபாவளி ஷாப்பிங் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பெண்ணிடம் வீட்டு வாசலிலே வைத்து அதிவேகமாக பைக்கில் வந்த மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டனர். இதன் சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.