திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரால் கொல்லப்பட்ட பாஜக தொண்டர்களின் குடும்பத்தினரின் வலியை மம்தா எப்பொழுதாவது உணர்ந்திருக்கிறாரா என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இந்த இரு மாநிலங்களுக்கும் ஒரு நாள் பயணமாக வருகிறார்.
முந்தைய சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் தேசியக் கட்சிகளால் தமிழகத்தில் பெரிய அளவில் வாக்குகளைப் பெற முடியவில்லை. இந்த காரணத்தால் திராவிடக் கட்சிகள் தேசியக் கட்சிகளுக்கு குறைந்தபட்ச தொகுதிகளையே அளிக்க முன்வருகின்றன.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை சென்னையில் சந்தித்து தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து விவாதித்தார்.
நாராயணசாமி அரசுதான் ஊழலுக்கு காரணம் என்று அமித் ஷா குற்றம் சாட்டினார். மையம் அனுப்பிய ரூ .15,000 கோடி தொகை, திருப்பி, காந்தி குடும்ப சேவைக்காக டெல்லிக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
சேத்ஷ்வர் புஜாரா நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் பிங்க்-பந்து டெஸ்ட் (Pink-Ball Test) போட்டியில் இரட்டைச் சதம் அடிக்க வாழ்த்துக் கூறிய அமித் ஷாவின் வார்த்தை பொய்த்துப் போனது.
நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் பிங்க்-பந்து டெஸ்ட் (Pink-Ball Test) போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்த இந்தியாவுக்கு இரட்டைச் சதம் அடித்து உதவ வேண்டும் என்று சேத்ஷ்வர் புஜாராவிடம் அமித் ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.
நேபாளம் மற்றும் இலங்கையில் கட்சியை விரிவுபடுத்துவதற்கும் இரு நாடுகளில் கட்சியை வலுப்படுத்தற்கும் ஆன அமித் ஷா திட்டமிட்டார் என திரிபுரா முதலமைச்சர் கூறியிருப்பது, பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு போட்டிகள் கொண்ட இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகள் மொட்டெரா ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கின்றன. இதில் 50 சதவீத பார்வையாளர்கள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஜி.சி.ஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், ஜம்மு-காஷ்மீர் மத்திய பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.
மேற்கு வங்காளத்தில் உள்ள தாகூர்நகரில் தேர்தல் பிரசாரத்திற்கான பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கொரோனா தடுப்பூசி போடும் பனி முடிந்தவுடன், சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் ஜோஷிமாத்தில் பனிப்பாறை உடைந்தபின் உத்தரகண்ட்டில் தீவிர எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரை 150 பேரை காணவில்லை. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
விவசாயிகள் போராட்டம் தொடர்ச்சியாக நீடிக்கும் நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து அரசு சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என கோரி வருகின்றனர்.
டெல்லியின் புறநகரில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து ட்வீட் செய்ததற்காக ஸ்வீடன் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் மீது டெல்லி காவல்துறை வியாழக்கிழமை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். அந்த சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி, கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக லட்சக்கணக்காண விவசாயிகள் தேசிய தலைநகரம் டெல்லி எல்லையில் (Delhi Border) போராட்டம் செய்து வருகின்றனர்.
தலைநகர் தில்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறைகள் மற்றும் செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை ஏற்றி சம்பவம், உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது. நாட்டை அவமானப்படுத்தும் வகையிலான இந்த சம்பவத்திற்குப் பிறகு, செங்கோட்டையில் ஏராளமான பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.