PM மோடியை தொடர்ந்து தமிழகம் வரும் அமித்ஷா; வருகையின் நோக்கம் என்ன?

விழுப்புரத்தில் நடைபெறும் பாஜகா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 28 ஆம் தேதி தமிழகம் வருகிறார்..!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 16, 2021, 01:07 PM IST
PM மோடியை தொடர்ந்து தமிழகம் வரும் அமித்ஷா; வருகையின் நோக்கம் என்ன?  title=

விழுப்புரத்தில் நடைபெறும் பாஜகா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 28 ஆம் தேதி தமிழகம் வருகிறார்..!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் (TN Assembly elections) நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் பரப்புரை மேற்கொள்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் தமிழக அரசியல் (TN Govt) கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள தேசிய கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த மாதம் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) தமிழகம் வருகை தந்து திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்சாரம் செய்துவிட்டு சென்றார். அதே நாளில் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தேசியத் தலைவர் JP நட்டாவும் தமிழகத்திற்கு வருகை புரிந்து மதுரையில் BJP பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். 

ALSO READ | நிதி மோசடிகளை தவிர்க்க 'Digital Intelligence' பிரிவை அமைக்க அரசு திட்டம்!!

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (Amit Shah) வரும் 28 ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தருகிறார். விழுப்புரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகிறார். தமிழகத்தில் BJP எப்படியாகினும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று அதிகளவில் வேட்பாளர்களை சட்டப்பேரவைக்குள் அனுப்ப வேண்டும் என்று முடிவெடுத்துஅதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 14 ஆம் தேதி பிரதமர் மோடி (PM Modi) ஒருநாள் பயணமாக சென்னைக்கு வருகை தந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை (Edappadi Palaniswami) தனியாக அழைத்து பேசிவிட்டு சென்றார். இந்த சூழலில் அமித்ஷாவின் வருகை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News