புதுச்சேரி: புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி மக்களை பாஜகவுக்கு வாய்ப்பு வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார். பாஜக தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரி இந்தியாவின் மகுடமாக மாறும் என அமித் ஷா உறுதியளித்தார்.
காரைக்காலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், வரவிருக்கும் தேர்தலில் பாஜக தலைமையில் புதுச்சேரியில் என்டிஏ அரசு அமைக்கப்படும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையை அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு புதுச்சேரியில் நடந்த தனது முதல் தேர்தல் பேரணியில் ஷா உரையாற்றினார்.
புதுச்சேரியில் (Puducherry) 30 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டில் வேலையின்மையில் புதுச்சேரி, 75 சதவீதத்தில் முதலிடத்தில் உள்ளது என்று கூறி, பாஜக தலைமையிலான ஆட்சி வந்தால் அது வேலையின்மை விகிதத்தை 40 சதவீதத்திற்குக் குறைக்கும் என்று அவர் உறுதியளித்தார்.
புதுச்சேரியை ‘BEST’ ஆக்குவதற்கு, அதாவது, வணிகம் (Business), கல்வி (Education), ஆன்மீகம் (Spirituality) மற்றும் சுற்றுலா (Tourism) ஆகிய துறைகளுக்கு மையமாக விளங்கும் புதுச்சேரியை மேம்படுத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) இந்த கூற்றை அளித்துள்ளார் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ALSO READ: தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6 அன்று சட்டமன்ற தேர்தல்கள் நடக்கும்: தலைமை தேர்தல் ஆணையர்
ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் குடிநீர் வழங்குவதாகவும் ஷா உறுதியளித்தார். புதுச்சேரியின் இளைஞர்கள் புத்திசாலிகள் மற்றும் கடின உழைப்பாளிகள் என்று கூறி, பிரதமர் அவர்களுக்கு உலகெங்கிலும் உள்ள இளைஞர்களுடன் இணைவதற்கான தளத்தை வழங்குவார் என்றார்.
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியை குற்றம் சாட்டிய மத்திய உள்துறை அமைச்சர், புதுச்சேரி மக்களுக்கு சேவை செய்வதை விட காந்தி குடும்பத்திற்கு சேவை செய்வதிலும், அவர்களின் கால்களைப் பிடிப்பதிலும் தான் அவர் அதிக ஆர்வம் காட்டுவதாகக் கூறினார்.
புதுச்சேரியில் பாஜக தங்கள் அரசாங்கத்தை கவிழ்த்ததாக சில காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியதாக அவர் கூறினார். "தனது தலைவனின் முன்னிலையில் மொழிபெயர்ப்பில் கூட பொய் கூறிய ஒரு மனிதரை நீங்கள் ஒரு முதலமைச்சராக்கினீர்கள் என்று நான் அவர்களிடம் சொல்ல விரும்புகிறேன். சிறந்த பொய்யர் விருது இருந்தால், அது நாரணசாமிக்கு செல்ல வேண்டும்.” என்றார் அமித் ஷா.
காங்கிரசில் தகுதிக்கு இடமில்லை என்று அமித் ஷா குற்றம் சாட்டினார். “நமசிவாயம் தலைமையில் காங்கிரஸ் 2016 தேர்தலில் போராடியதை அவர் நினைவு கூர்ந்தார். ஆனால் முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் போது, காங்கிரஸ் நாராயணசாமியைத் தேர்ந்தெடுத்தது. கட்சித் தலைமை தங்களுக்கு கட்டுப்பட்ட ஒருவர் முதல்வராக இருக்க வேண்டும் என விரும்பியது. இதை விட புதுச்சேரி மக்களுக்கு ஒரு பெரிய துரோகம் இருக்க முடியாது," என்று அவர் கூறினார்.
நாராயணசாமி அரசுதான் ஊழலுக்கு காரணம் என்று அமித் ஷா (Amit Shah) குற்றம் சாட்டினார். மையம் அனுப்பிய ரூ .15,000 கோடி தொகை, திருப்பி, காந்தி குடும்ப சேவைக்காக டெல்லிக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
புதுச்சேரியின் உயர்மட்ட தலைவர்கள் காங்கிரஸை விட்டு பாஜகவில் சருவதை சுட்டிக்காட்டிய அமித் ஷா, புதுச்சேரியில் மட்டுமல்ல, நாடு முழுவதும் வம்ச அரசியலால் காங்கிரஸ் சீர்குலைந்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மையத்தில் மீன்வளத் துறை இல்லை என்று வெளியிட்ட சமீபத்திய அறிக்கையை பாஜக தலைவர் கேலி செய்தார். "ராகுல், 2019 ஆம் ஆண்டில் மோடி அரசாங்கம் இந்தத் துறையை உருவாக்கியபோது நீங்கள் விடுமுறையில் இருந்தீர்கள். மையத்தில் மீன்வளத் துறை இருப்பது கூடத் தெரியாத ஒரு கட்சியை ஆட்சிக்கு கொண்டுவர விரும்புகிறீர்களா என்பதை புதுச்சேரி மக்கள் தீர்மானிக்க வேண்டும்." என்றார் அமித் ஷா.
ALSO READ: PM Modi in Puducherry: காத்து எங்க பக்கம் திரும்பிடுச்சு, காங்கிரஸ் ஆட்சி அமைக்காது
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR