மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். அந்த சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி, கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக லட்சக்கணக்காண விவசாயிகள் தேசிய தலைநகரம் டெல்லி எல்லையில் (Delhi Border) போராட்டம் செய்து வருகின்றனர்.
வேளாண் சட்டங்களுக்கு (Indian Agriculture Act 2020) ஆதரவும், எதிர்ப்பும் பெருகிவரும் நிலையில் வெளிநாட்டினர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வரும் செய்திகளுக்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே உட்பட பலரும் டிவிட்டரில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அவை வைரலாகின்றன. இது உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் டிவிட்டர் பதிவு...
No propaganda can deter India’s unity!
No propaganda can stop India to attain new heights!
Propaganda can not decide India’s fate only ‘Progress’ can.
India stands united and together to achieve progress.#IndiaAgainstPropaganda#IndiaTogether https://t.co/ZJXYzGieCt
— Amit Shah (@AmitShah) February 3, 2021
இந்த டிவிட்டர்களும், அதற்கு பதிலிடும் டிவிட்டர்களும் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன.
இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
India’s sovereignty cannot be compromised. External forces can be spectators but not participants.
Indians know India and should decide for India. Let's remain united as a nation.#IndiaTogether #IndiaAgainstPropaganda— Sachin Tendulkar (@sachin_rt) February 3, 2021
விவசாயிகளுடன் மத்திய அரசு இதுவரை நடத்திய 11 கட்டப் பேச்சுவார்த்தையும் எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்துள்ளது. இது கிரிக்கெட் வீரர் அணில் கும்ப்ளேவின் பதிவு...
As the world's largest democracy, India is more than capable of taking her internal issues to amicable solutions. Onwards and upwards. #IndiaTogether#IndiaAgainstPropaganda
— Anil Kumble (@anilkumble1074) February 3, 2021
சனிக்கிழமை நாடு தழுவிய அளவில் சாலை மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட உள்ளனர். இதனை தடுக்க மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ALSO READ | விவசாயிகள் போராட்டம் குறித்த ட்வீட் ... கங்கனாவிற்கு எதிராக போலீஸார் வழக்கு பதிவு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR