தில்லி, மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்கள் நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்படும் மின் நெருக்கடி பிரச்சினையை சமாளிக்க மத்திய அரசிடம் உதவி கோரியுள்ளன.
நான் பிஜேபி கட்சியில் சேரப்போவதில்லை. தற்போது வரை நான் காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன். விரைவில் விலகுவேன் -முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்
நவ்ஜோத் சிங் சித்துவுடனான கருத்து வேறுபாடு காரணமாக முதல்வர் பதவியை கேப்டன் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். மேலும் பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, நான் அவமானமாக உணர்கிறேன் என தனது அதிருப்தியை வெளிப்படியாக வெளிப்படுத்தி இருந்தார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , துணை எதிர்க்கட்சித் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம், முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல், மேற்கொள்ளும் திடீர் தில்லி பயணம் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் இரண்டு ஆண்டுகளில் முதன் முறையாக, ஜம்மு-காஷ்மீரின் அரசியல் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஜம்மு காஷ்மீர் அரசியலுக்கும் புது தில்லிக்கும் இடையில் இருந்த ஒரு வித மவுனத்தை கலைத்துள்ளார் பிரதமர் மோடி.
சைபர் மோசடி அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் முயற்சியாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதற்கான பிரத்யேக ஹெல்ப்லைன் எண் மற்றும் தளத்தை அறிமுகப்படுத்தினார்
மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என செய்திகள் வெளியான நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பிரதமர் மோடியுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் நாளுக்கு நாள் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான அதிருப்தி அலை அதிகரித்து வருகிறது. தினமும் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து வருகிறார். மீண்டும் இவருக்கு முதல்வர் பதவி கிடைக்குமா? இல்லையா? என்பது தான் சர்ச்சையாக உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாநில நலன் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,மறுஆய்வுக் கூட்டத்தை புறக்கணித்ததற்காக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
நேற்று காலை நடிகர் விவேக் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருக்கும் போது, திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு, மயக்கமானார்.
மேற்கு வங்க மாநிலத்தில் முதல் நான்கு கட்டங்களுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. மேற்குக் வங்க மாநிலத்தில் அடுத்தக்கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்டுள்ளார்.
மக்களிடம் அதிமுக கூட்டணி சாதனையை சொல்லி ஒட்டு கேட்கிறது. திமுக கூட்டணி தங்கள் சாதனையை சொல்லாமல் வெறுப்பை முன் வைத்து தேர்தலை சந்திப்பதால் வெற்றி பெற முடியாது என்றார்.
ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நாள் மட்டுமல்ல, பாஜகவின் ஸ்தாபன நாளும் ஆகும், அந்நாளில், அதிமுக, பாஜக, பாமக வேட்பாளர்களை மகத்தான் வெற்றியை பதிவு செய்வார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடக்கவுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் உச்சகட்ட பரப்புரைகளை மெற்கொண்டு வருகின்றன.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட மும்பை காவல் ஆணையர் பரம் வீர் சிங், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய ஒரு கடிதம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (Amit Shah) மற்றும், பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா (JP Nadda) ஆகியோர், தமிழ்நாட்டு மக்களுக்கு பங்குனி உத்திர திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்களது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து பதிவிட்டுள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஜே.பி.நட்டா இன்று தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வார். பல்வெறு இடங்களில் நடக்கவிருக்கும் பொதுக் கூட்டங்களில் அவர் உரையாற்றுவார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.