ஏப்ரல் மாதம் நடக்கும் டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம்.ஆத்மி. கட்சி வெற்றி பெற்றால் அடுத்த ஆண்டிற்குள் டெல்லி லண்டனை போல் மாறும் என டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சத் பூஜை என்ற பெயரில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் விதிமீறலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. ரீத்துராஜ் கோவிந்த் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நேற்று இரவு 10 மணியளவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் மறைந்த நிர்வாகி ஷங்கர் சவதாஸ் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறினார் அர்விந்த் கெஜ்ரிவால். ஆறுதல் கூறிவிட்டு வீட்டை விட்டு அவர் வெளியேறிய போது திடீரென ஒருவர் அவர் மீது மை வீசினார். மை வீசியாவரின் பெயர் தினேஷ் ஓஜா ஆகும்.
பின்னர் தினேஷ் ஓஜாவை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் ஏவிபிவி அமைப்பை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. பரதீய ஜனதாவுடன் தொடர்புடைய அமைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் ஆம் ஆத்மி எம்,எல்.ஏ சோம்நாத் பார்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பாதுகாவலர்களை தாக்கிய வழக்கில் சோம்நாத் பார்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது ஹவுஸ்காஸ் போலீஸ் நிலையத்தில் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி புகார் பதிவு செய்யப்பட்டது.
பா.ஜ.க. சார்பில் டெல்லி மாநிலங்களவை எம்.பி.யாக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து இருந்தார். அவர் ஜூலை மாதம் தன்னுடைய எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். கட்சி மேலிடத்துடன் இவருக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் ராஜினாமா செய்தார் என்று கூறப்பட்டது.
டெல்லியின் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் பஞ்சாப் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுயுள்ளார், கோல்டன் டெம்பல் என அழைக்கப்படும் சீக்கியர்களின் பொற்கோவில் அமைந்துள்ள அமிர்தசரஸ்க்கு காரில் சென்றார். அப்போது தன் காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பாதுகாப்பு வாகனத்தின் மீது அரவிந்த் கெஜ்ரிவால் வந்த இன்னோவா கார் வேகமாக மோதியது. சீட் பெல்ட் அணிருந்து இருந்ததால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
பாஜக-வில் இருந்து விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து புதிய அரசியல் கட்சியை தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பஞ்சாப் மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி "ஆவாஸ் இ பஞ்சாப் என்ற புதிய கட்சியை தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். ஏற்கனவே பஞ்சாப் மாநிலத்தில் மற்ற கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் இவரின் புதிய அரசியல் கட்சி தொடக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்கள் வாயிலாக கெஜ்ரிவால் பிரதமர் மோடி மீது பகிரங்க குற்றம்சாட்டியுள்ளார்.
டில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இக்கட்சி சார்பில் தனது ஆதரவாளர்களுக்கு 10 நிமிட வீடியோ பதிவை சமூக வலைதளங்கள் வாயிலாக அனுப்பியுள்ளார் கெஜ்ரிவால் அதில் அவர் பேசியிருப்பதாவது:-
பாஞ்சாப் விவகாரத்தில் தலையிட வேண்டாம் எனக்கூறியதால் தான் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததாக சித்து கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் நவ்ஜோத் சிங் சித்து நேற்று திடீர் என்று மேல்-சபை எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அவரது மனைவியும் பஞ்சாபில் தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து இருவரும் ஆம் ஆத்மியில் இணைய போவதாக செய்திகள் வெளியாகின.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் நவ்ஜோத் சிங் சித்து நேற்று திடீர் என்று மேல்-சபை எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேர திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி வட்டாரத்தில் கேட்ட போது:- சித்து எங்கள் கட்சியில் இணைந்தால் வரவேற்போம் என்று தெரிவித்தனர்.
கடந்த 2015-ம் ஆண்டு டெல்லி சட்டப் பேரவை தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையில் டெல்லியில் இலவச வை-பை வசதி தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கிழக்கு டெல்லியில் 500 இடங்களில் கட்டணமில்லா வை-பை வசதி இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும் என டெல்லி அரசு நேற்று அறிவித்துள்ளது. இந்த திட்டம் மாநில தகவல் தொழில் நுட்பத் துறை அமல்படுத்தும். இதற்கான டெண்டர் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் தெரிவித்துயுள்ளனர்.
டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த கட்சியைச் சேர்ந்த 21 எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 21 எம்.ஏல்.ஏக்களுக்கு ஆதாய பதவி வழங்கும் சட்ட திருத்தத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததால், கடந்த மாதம் பாராளுமன்ற செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ள 21 எம்.எல்.ஏக்களின் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.