வர்தா புயல் கடந்து 2 வாரங்கள் கடந்து விட்ட நிலையில், சாலைகளில் முறிந்து விழுந்த மரங்கள் இன்னும் அகற்றப்படாமலேயே உள்ளன. இதற்கான எந்த முயற்சியையும் மாநகராட்சி செய்யவில்லை என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
வர்தா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கி அவர்களின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்று தமிழக அரசை
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதைக்குறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியதாவது:-
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று கூடியது. வார்தா புயல் சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது
டெல்லி மேல் சபையில் வார்தா புயல் பாதிப்பு குறித்த விவாதம் நடந்தது. இதில் பேசிய தமிழக எம்.பி.க்கள் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுத்தினார்.
சென்னையை தாக்கிய அதிதீவிர வர்தா புயல் வலுகுறையாமல் பெங்களூருவையும் நேற்று பதம் பார்த்தது. பெங்களூருவில் விடிய விடிய மழை பெய்தது.
வங்கக் கடலில் உருவான அதிதீவிர புயலான வர்தா சென்னையில் நேற்று பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ந்து தாக்கியது. புயல் கரையைக் கடந்த போது உச்சகட்டமாக மணிக்கு 190 கி.மீ வேகத்தில் பயங்கர காற்றும் வீசியது.
இப்புயல் நேற்று இரவு 7 மணி அளவில் முழுமையாக கரையைக் கடந்தது. ஆனாலும் வலுகுறையாமல் திருவண்ணாமலை வழியாக பெங்களூருவை நோக்கி சென்றது. பெங்களூருவில் விடிய விடிய மழை பெய்தது.
தற்காலிகமாக மூடப்பட்ட திருப்பதி விமான நிலையம் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
வர்தா’ புயல் காரணமாக விமான சேவைகள் நேற்று முடங்கியுள்ளன.
இந்நிலையில் திருப்பதி விமான நிலையம் ‘வர்தா’ புயல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டு இருந்தது. புயல் காற்று மற்றும் மழை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட திருப்பதி விமான நிலையம் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
வர்தா' புயலால் மிகவும் பாதிப்பு அடைந்த சென்னை , காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளி கல்வித் துறை அமைச்சர் மஃபா. பாண்டியராஜன் அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த இரு தினங்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளையும் (14.12.2016) விடுமுறை - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன்.
நுங்கம்பாக்கத்தில் 2 அரசு பேருந்துகள் மீது மரம் விழுந்தது. சென்னையில் மீட்பு பணியில் களமிறங்கியது ராணுவம். இதுவரை நான்கு பேர் பலி என தகவல். சென்னை விமான நிலையம் 9 மணி வரை மூடல். சென்னை வர்தா புயலின் சேதம் ரூ1,000 கோடியாக இருக்கலாம் எனத்தகவல் கிடைத்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகி உள்ள "வர்தா' புயல் அதிதீவிர புயலாக மாறி உள்ளது. இந்தப் புயல் இன்று மதியம், 2:00 மணி முதல் 5:00 மணி வரை கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகி உள்ள "வர்தா' புயல் அதிதீவிர புயலாக மாறி உள்ளது. இந்தப் புயல் இன்று பிற்பகல் சென்னை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகி உள்ள "வர்தா' புயல் அதிதீவிர புயலாக மாறி உள்ளது. இந்தப் புயல் இன்று பிற்பகல் சென்னை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
வங்கக் கடலில் உருவாகி உள்ள "வர்தா' புயல் அதிதீவிர புயலாக மாறி உள்ளது. இந்தப் புயல் இன்று பிற்பகல் சென்னை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
புயல் சென்னைக்கு அருகில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் உருவாகி உள்ள "வர்தா' புயல் அதிதீவிர புயலாக மாறி உள்ளது. இந்தப் புயல் இன்று பிற்பகல் சென்னை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தப் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
புயல் சென்னைக்கு அருகில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வங்க கடலில் உருவாகிய ‘வர்தா’ புயல் சென்னை அருகே வேகமாக நகர்ந்து வருகிறது. இன்று காலை சென்னைக்கு கிழக்கு மற்றும் வடகிழக்கே 440 கிமீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. தற்போது சென்னையில் இருந்து 370 கிமீ தொலைவில் வர்தா புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் வடக்கு தமிழ்நாடு-தெற்கு ஆந்திரா இடையே சென்னை அருகே நாளை பிற்பகல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.