சென்னை: வங்கக் கடலில் உருவாகி உள்ள "வர்தா' புயல் அதிதீவிர புயலாக மாறி உள்ளது. இந்தப் புயல் இன்று மதியம், 2:00 மணி முதல் 5:00 மணி வரை கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வர்தா புயல் தென்மேற்கு வங்க கடலில், காலை 9:30 மணி நிலவரப்படி, சென்னையில் இருந்து 87 கி.மீ., தொலைவில் மையம் கொண்டிருந்தது. அப்போது தீவிர புயலாக உருமாறி மணிக்கு, 100 கி.மீ., முதல் 120 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். தெற்கு திசையில் இருந்து காற்று வீசும் மழை பெய்யும்.
புயல் கரையை கடந்த பிறகும், 12 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகமாகவே இருக்கும்.
மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். மக்கள், அரசு மற்றும் தேசிய பேரிடம் மீட்பு படையினர் அறிவுரைபடி செயல்பட்டு பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.