வர்தா புயல்: மூன்று மாவட்டங்களில் நாளை பள்ளிகள் விடுமுறை

Last Updated : Dec 13, 2016, 08:28 PM IST
வர்தா புயல்: மூன்று மாவட்டங்களில் நாளை பள்ளிகள் விடுமுறை title=

வர்தா' புயலால் மிகவும் பாதிப்பு அடைந்த சென்னை , காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளி கல்வித் துறை அமைச்சர் மஃபா. பாண்டியராஜன் அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த இரு தினங்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

‛வர்தா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிப்பதற்காக நிவாரண பொருட்கள் அடங்கிய 2 போர் கப்பல்கள் சென்னை துறைமுகத்திற்கு வந்தன.  சென்னை புறநகர் பகுதியில் மின்விநியோகம் சீராக ஒரு சில நாட்கள் ஆகும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தனது பேட்டியில் கூறியுள்ளார். 

உதவி தேவைப்படுவோரின் வசதிக்காக அவசர எண் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி ஹெல்ப்லைன் எண்கள்:-

 

வர்தா புயல் காரணமாக சென்னையில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் சென்னையின் அனைத்து சாலைகளும் துண்டிக்கப்பட்டு, பஸ், ஆட்டோ, கார், இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

 

 

புயலில் பாதிப்பு அடைந்த இடங்களில் நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.

புயல் காற்று  மற்றும் மழை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

வர்தா புயல் மற்றும் கனமழை காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. 

வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத்தாழ்வு நிலை வர்தா புயலாக உருவானது. இந்தப்புயல் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளதாகவும் அதனால் வட தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வர்தா புயல் நேற்று சென்னையை கரையை கடந்தது. 

இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்தது. பலத்த சூறாவளி காற்று வீசியது. மழை இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த புயல் மற்றும் வெள்ளத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னை-4, காஞ்சிபுரம்-2, திருவள்ளூர்-2, விழுப்புரம் மற்றும் நாகையில் தலா ஒருவர் என 10 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு மையம் அறிவித்துள்ளது. 

 

 

நுங்கம்பாக்கத்தில் நேற்று 2 அரசு பேருந்துகள் மீது மரம் விழுந்தது. சென்னையில் மீட்பு பணியில் களமிறங்கியது ராணுவம். இதுவரை 10 பேர் பலி என தகவல். சென்னை விமான நிலையம் நேற்று 9 மணி வரை மூடி இருந்தது. மழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 10 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.

Trending News