முதல்வர் ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக இன்று டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார். நாளை பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரைச் சந்திக்க உள்ளார்.
டெல்லியில் திமுக அலுவலகமான அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ஏப்ரல் 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளார். இதற்காக இன்று இரவு டெல்லி புறப்படுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்று இரவு 9.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட உள்ளார்.
மேலும் படிக்க | போக்குவரத்துத்துறையிலிருந்து அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி மாற்றம்!
பிரதமர் நரேந்திர மோடியை நாளை பிற்பகல் சந்தித்து அறிவாலயத் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்க உள்ளார். அப்போது தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுவையும் பிரதமரிடம் அளிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. நீட் தேர்வு விலக்கு மசோதா, மீனவர்கள் பிரச்சினை, மேகேதாட்டு விவகாரம், முல்லைப் பெரியாறு பிரச்சினை உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து பிரமதர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்வார் என்றும், மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என முதல்வர் பிரதமரிடம் வலியுறுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து நாளை மாலை மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார். மேலும் நாளை மறுதினம் (ஏப்ரல் 1-ம் தேதி) காலை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களைச் சந்தித்து அறிவாலயம் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்க உள்ளார்.
ஏப்ரல் 2-ம் தேதி டெல்லியில் அறிவாலயத்தை முதல்வர் ஸ்டாலின் திறக்கவுள்ளார். அவ்வளாகத்தில் அண்ணா, கலைஞர் கருணாநிதி சிலைகளையும் ஸ்டாலின் திறக்கவுள்ளார்.
மேலும் படிக்க | ஜூலை 24-ம் தேதி குரூப் 4 தேர்வு: அக்டோபர் மாதம் முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G