மியான்மர் எல்லை பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் அதிரடியாக நுழைந்து நாகா தீவிரவாத அமைப்பினரின் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பல தீவிவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் இதனால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
Heavy casualties reportedly inflicted on NSCN(K) cadre. No casualties suffered by Indian Security Forces
— EasternCommand_IA (@easterncomd) September 27, 2017
பிரதமர் மோடி சீனாவில் இருந்து மூன்று நாள் அரசு பயணமாக நேற்று மியான்மர் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
தலைநகர் நய் பியி டாவில் பிரதமர் மோடிக்கு, மியான்மர் அதிபர் ஹிடின் கியாவ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி, மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி-யை இன்று சந்தித்தார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது இந்தியா - மியான்மர் இடையே 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மியான்மர் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அரசு ஆலோசகரான ஆங் சான் சூ கியை இன்று சந்தித்தார்.
பிரதமர் நரேந்திர சீனாவில் இருந்து மூன்று நாள் அரசுமுறை பயணமாக நேற்று மியான்மர் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
தலைநகர் நய் பியி டாவில் பிரதமர் மோடிக்கு, மியான்மர் அதிபர் ஹிடின் கியாவ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் முப்படையினர் அளித்த மரியாதையை மோடி ஏற்றுக்கொண்டார். மியான்மரில் நாளை வரை பிரதமர் மோடி தங்குகிறார்.
105 பயணிகள் மற்றும் 11 சிப்பந்திகளுடன் மியான்மர் ராணுவ விமானம் மாயமானது. இராணுவ விமானம் மாயமானதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மியான்மரில் 116 பேருடன் சென்ற இராணுவ விமானம் திடீரென்று தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானதாக அந்நாட்டின் ராணுவ தளபதி உறுதிப்படுத்தி உள்ளார். மியான்மரின் மையிக் மற்றும் யாங்கூன் இடையே இந்த விமானம் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 1.35 மணிக்கு விமானம் புறப்பட்டு 20 மைல்கள் தொலைவில் உள்ள தாவே நகருக்கு மேற்கே சென்றபோது விமானத்தின் தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டதாக ராணுவ அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மர் அதிபர் யு ஹிடின் கியாவ் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டில்லியில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதன் பின்னர் இரு தலைவர்கள் முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.