SBI FD Plans: எஸ்பிஐ வழங்கும் சிறந்த முதலீட்டுத் திட்டங்கள்... லட்சாதிபதி ஆவது ஈஸி தான்

ஃபிக்ஸட் டெபாசிட் (FD) என்னும் நிலையான வைப்பு திட்டங்களில்  முதலீடு செய்வது பெரும்பாலான மக்களின் முதல் தேர்வாக உள்ளது. இதற்கான மிக முக்கிய காரணம், இதில் முதலீடு செய்வது முற்றிலும் பாதுகாப்பானது என்பது தான். கூடவே வருமானமும் நிலையானது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 29, 2025, 02:21 PM IST
  • பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு FD மீது சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
  • எஸ்பிஐ பேட்ரன்ஸ் எஃப்டியுடன் இணைந்து ஹர் கர் லக்பதி ஆர்டி திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது.
  • நிலையான வைப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தைப் பெறலாம்.
SBI FD Plans: எஸ்பிஐ வழங்கும் சிறந்த முதலீட்டுத் திட்டங்கள்... லட்சாதிபதி ஆவது ஈஸி தான் title=

SBI FD Schemes: ஃபிக்ஸட் டெபாசிட் (FD) என்னும் நிலையான வைப்பு திட்டங்களில்  முதலீடு செய்வது பெரும்பாலான மக்களின் முதல் தேர்வாக உள்ளது. இதற்கான மிக முக்கிய காரணம், இதில் முதலீடு செய்வது முற்றிலும் பாதுகாப்பானது என்பது தான். கூடவே வருமானமும் நிலையானது. நாட்டின் பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு FD மீது சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றன. அந்த வகையில் நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) சில சிறப்பு FD திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் நல்ல லாபத்தைப் பெறலாம்.

எஸ்பிஐ அம்ரித கலசம் எஃப்டி திட்டம்

பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) அம்ரித கலசம் FD திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கடைசி வாய்ப்பு 2025 மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே. இந்த FD முதலீட்டிற்கான காலம் 400 நாட்கள். சாதாரண குடிமக்களுக்கு 7.10% வட்டி விகிதம் கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கு 7.60% வட்டி விகிதத்தின் பலனைப் பெறுகிறார்கள். பாதுகாப்பான மற்றும் சிறந்த வருமானத்தை பெற விருபுபவர்களுக்கு, இந்த எஃப்டி திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும்.

SBI அம்ரித விருஷ்டி FD திட்டம்

எஸ்பிஐயின் இரண்டாவது சிறப்புத் திட்டமான அம்ரித் விருஷ்டி எஃப்டி திட்டத்திலும் 2025 மார்ச் 31ம் தேதி வரை முதலீடு செய்யலாம். இந்த FD முதலீட்டிற்கான காலம் 444 நாட்கள். சாதாரண குடிமக்கள் இதில் முதலீடு செய்வதன் மூலம் 7.25% வட்டி விகிதத்தின் பலனைப் பெறுகிறார்கள். மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டமும் முதலீட்டாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

SBI பேட்ரன்ஸ் FD திட்டம் (SBI Patrons FD Scheme)

SBI  வழங்கும் இந்த சிறப்பு FD திட்டம் சூப்பர் மூத்த குடிமக்களுக்கானது. அதாவது 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு SBI  கால வைப்புத் திட்டத்தின் கீழ், 80 வயதிற்கு மேற்பட்ட முதலீட்டாளர்கள் மூத்த குடிமக்கள் FD உடன் ஒப்பிடும்போது 10 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.01 சதவீதம் அதிக வட்டியைப் பெறுவார்கள். இந்த திட்டம், மூத்த குடிமக்களின் நிதி தேவைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கூடுதல் வருமான வசதியை வழங்குவதற்கான பாரத ஸ்டேட் வங்கியின் முயற்சியாகும். 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அதிக நிதி நன்மைகளை அளிக்க எஸ்பிஐ இந்த திட்டதை தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க | Budget 2025: மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் நீட்டிக்கப்படுமா? பட்ஜெட்டில் வருகிறதா அறிவிப்பு?

எஸ்பிஐ பேட்ரன்ஸ் வைப்புத்தொகையின் கீழ், மூத்த குடிமக்கள் குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.3 கோடி வரை முதலீடு செய்யலாம். அவர்கள் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை தங்கள் சேமிப்பை லாக் வைக்கலாம். SBI பேட்ரன்ஸ் கால வைப்புத்தொகையில் 80 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முதலீடு செய்யலாம். எஃப்டியில் கிடைக்கும் கூடுதல் வட்டி விகிதப் பலன் ரூ. 3 கோடிக்கும் குறைவான முதலீடுகளுக்குப் பொருந்தும்.

FD  திட்டத்தில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

 FD திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும் மற்றும் சரியான நேரத்தில் சிறந்த வருமானத்தைப் பெறுவீர்கள். நீங்கள் நிலையான வைப்புகளில் முதலீடு செய்ய நினைத்தால், மேலே குறிப்பிட்டுள்ள திட்டங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து, முதலீட்டின் கடைசித் தேதிக்கு முன் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எஸ்பிஐ ஹர் கர் லக்பதி  என்னும் ஆர்டி திட்டம்

நிலையான வைப்பு தொகையை தவிர நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ, எஸ்பிஐ பேட்ரன்ஸ் எஃப்டியுடன் இணைந்து ஹர் கர் லக்பதி ஆர்டி திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. இது ஒரு தொடர் வைப்புத் திட்டமாகும். வாடிக்கையாளர்களுக்கு ரூ.1 லட்சம் அல்லது அதற்கு மேல் சேமிக்க உதவும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ ஹர் கர் லக்பதி திட்டம் அனைத்து வயதினருக்கானது. அதாவது இந்த திட்டத்தின் கீழ் அனைவரும் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ கணக்கு தொடங்கலாம். சரியாக கையொப்பமிடக்கூடிய 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தனியாக கணக்கு தொடங்கலாம். ஹர் கர் லக்பதி திட்டத்தின் கீழ், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கணக்குகளை பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் தொடங்கலாம்.

மேலும் படிக்க | பென்ஷன் இல்லை என்ற டென்ஷன் வேண்டாம்... மாத வருமானம் ரூ.50,000 கிடைக்க உதவும் SWP திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News