வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு முன்பு சமூக ஆர்வலர்கள், குல்பூஷன் ஜாதவுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்!
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ், பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். பின்பு அவருக்கு ராணுவ கோர்ட் மரண தண்டனை விதித்தது.
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, அவரை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்தது, எனினும் அவருக்கு தூதரக உதவிகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து, ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி நெதர்லாந்தின் தி ஹேக் நகரின் சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை பரிசீலித்த சர்வதேச நீதிமன்றம், வழக்கு நடைபெற்று வருவதால் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைத்து கடந்த ஆண்டு மே மாதம் 18-ம் தேதி உத்தரவிட்டது.
இதற்கிடையில் குல்பூஷன் ஜாதவின் குடும்பத்தார் அவரை சந்திக்க வேண்டும் என்பதற்காக எடுத்த தொடர் முயற்சி செய்த பின்னர் அவரை சந்திக்க அனுமதி பெற்றனர்.
பின்னர் இஸ்லாமாபாத்தில் குல்பூஷன் ஜாதவை அவரது மனைவி மற்றும் தாயார் சந்தித்தபோது பாதுகாப்பு என்ற பெயரில் அவர்களின் தாலி, வளையல்களை கழற்ற வைத்தும் நெற்றியில் இருந்த பொட்டை அழிக்கச் செய்தனர். மேலும் ஜாதவ் மனைவியின் செருப்பில் கேமரா இருப்பதாக கூறி, அதனையும் கழட்ட கூறியுள்ளனர்.
Pakistan's narrow-mindedness was exposed with how they treated #KulbhushanJadhav's mother & wife, what policy makers & people here need to understand is that Pak as a whole is also being run w/same narrow-minded mentality-Protester at #ChappalChorPakistan protest in Washington DC pic.twitter.com/E62v0t3LsJ
— ANI (@ANI) January 8, 2018
பாகிஸ்தானின் இந்த செயலுக்கு பலத் தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு முன்பு சமூக ஆர்வலர்கள், குல்பூஷன் ஜாதவுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின் போது 'சப்பல்சோர்பாகிஸ்தான்' என்ற வாசகம் அடங்கிய பாதாகைகள் மற்றும் செருப்புகளையும் தூக்கி வந்து முழக்கமிட்டனர். மேலும் பாகிஸ்தான் தூதரகத்திற்கு செருப்புகளை நன்கொடையாக வழங்குவதாக கூறி போராட்டம் நடத்தினர்.