டெல்லியில் போர் வீரர்கள் நினைவிடத்தில் அமர்ஜவான் ஜோதியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே 1971ஆம் ஆண்டில் நடந்த போரில் இந்தியா, வெற்றியை வசப்படுத்தியது. இந்த வெற்றிக்கு பிறகே கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட பகுதி வங்காள தேசம் என தனிநாடாக பிரிந்தது. எனவே, இந்தப் போரில் உயிரிழந்த வீரர்களை போற்றும் வகையில் நாடு முழுவதும் இன்று வெற்றி நாளாக அனுசரிக்கப்படுகிறது.
இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் போரின் 46 ஆவது வெற்றி தினமான இன்று, டெல்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடம் அமைந்துள்ள அமர்ஜவான் ஜோதியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் முப்படைத் தளபதிகளும் அமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்தினர்.
Vijay Diwas: Nirmala Sitharaman, General Bipin Rawat pay tributes to soldiers
Read @ANI story | https://t.co/SkRcxW4TEi pic.twitter.com/DiAAw8Abca
— ANI Digital (@ani_digital) December 16, 2017