தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா மீதான பிடிவாரண்டுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்க பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா.
தமிழக சட்டப்பேரவையில் இன்று 2016- 2017-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப் பேரவை இன்று காலை கூடியது. காலை 11 மணியளவில் கூடிய சட்டப்பேரவைக் கூட்டத்தில், நிகழ் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக 6-வது முறையாக ஜெயலலிதா பதவியேற்றார். அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்ற பின்னர் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த ஓராண்டாக வலுத்து வருகிறது. சட்டப்பேரவை தேர்தலின்போது தங்கள் தேர்தல் அறிக்கையில் அதிமுக படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தது..
இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைத்தது. முதல்வராக 6-வது முறை பொறுப்பேற்ற ஜெயலலிதா, முதல் கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்படும் என்றும் டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் காலை 10 மணிக்கு பதிலாக 12 மணியாக மாற்றப்படும் என்றும் அறிவித்தார்.
கடலில் மீன்பிடிக்கும் போது, உயிரிழந்த 11 மீனவர்களின் குடும்பத்திற்கு முதலவர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். 11 மீனவர்களின் குடும்பத்திற்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்,
கடந்த மார்ச் 3-ம் தேதியன்று ராமநாதபுரம் மாவட்டம், சுந்தரமுடையான் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி என்பவரின் மகன் அழகர்,
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து வருவதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் 6,800 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வந்தன. மது விற்பனை மூலம் அரசுக்கு தினமும் ரூ.60 கோடி வருவாய் கிடைத்து வந்தது. இந்த நிலையில்,அதிமுக தேர்தல் அறிக்கையில், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.