நிர்பயாவிற்கு நடந்ததை போல மீண்டும் ஒரு சம்பவம் ஹரியானா மாநிலத்தில் நடந்துள்ளது.
ஹரியானா மாநிலம் ரோக்தாக் பகுதியை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் போலீசார் கூறுகையில், கடந்த 9-ம் வேலைக்கு சென்ற போது 7 பேர் கொண்ட கும்பலால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு காரை ஏற்றி கொலை செய்யப்பட்டு உள்ளார் என கூறினர்.
நிர்பயாவிற்கு நடந்ததை போல கொடூரமான செயல் மீண்டும் நடந்துள்ளதால் மக்கள் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்று அதிகாலையில் திருவண்ணாமலையில் அதிமுக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அருகே அதிமுக முன்னாள் நகர செயலாளர் கனகராஜ் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மூன்று மர்ம நபர்கள் அவரை கொலை செய்துள்ளனர். அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜீவ் காந்தியின் கொலையை பற்றி சிஐஏ 5 ஆண்டுகளுக்கு முன்பே கணித்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 1986-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ராஜீவுக்குப் பிறகு இந்தியா என்று தொடங்கும் தலைப்பில் 23 பக்க அறிக்கையை சிஐஏ தயாரித்து இருந்தது தெரியவந்துள்ளது.
இந்த அறிக்கையின் முதல் வரியில்:- பதவிக் காலம் முடிவடைவதற்குள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது. எனினும், அதன் பிறகு இடம்பெற்ற வாசகங்களில், ராஜீவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.
இந்துவாவை சேர்ந்த பாஜக தொண்டர் ரெமித் என்றவர் குத்திக்கொலை செய்யப்பட்டதால் கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் பினராய் என்ற இடத்தில் இந்துவா நிர்வாகி ரெமி மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பிற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இதனால் கேரளாவில் அரசுப் பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
சுவாதியை கொலை செய்த ராம்குமாருக்கு தற்போது சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவன் இருக்கும் வார்டு பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராம்குமாரின் உடல் நிலை தற்போது தேறி வருவதோடு மேலும் அவரது காயங்கள் குணமடைந்து விட்டது.
இன்னும் 2 நாட்களுக்கு அவனை மருத்துவமனையில் வைத்திருக்க போலீசாரும், டாக்டர்களும் முடிவு செய்துள்ளனர். அதன் பிறகு அவன் கழுத்தில் போடப்பட்டுள்ள தையல் பிரிக்கப்படும். தற்போது நேற்று அவன் மூன்று வேளை உணவையும் வழக்கம் போல் சாப்பிடிகிறான்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.