மர்ம நபர்களால் அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை

Last Updated : Feb 12, 2017, 09:58 AM IST
மர்ம நபர்களால் அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை  title=

இன்று அதிகாலையில் திருவண்ணாமலையில் அதிமுக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அருகே அதிமுக முன்னாள் நகர செயலாளர் கனகராஜ் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மூன்று மர்ம நபர்கள் அவரை கொலை செய்துள்ளனர். அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கனகராஜை வெட்டிக் கொலை செய்த பாபு, ராஜா மற்றும் சரவணன் ஆகிய மூன்று நபர்கள் நகர காவல் நிலையத்தில் சரணடைந்தனர். சொத்துப் பிரச்சனையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே கனகராஜ் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தின் அதிமுக நகரச் செயலாளராக கடந்த பத்து ஆண்டுகளாக பதவி வகித்தார் கனகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News