மும்பையில் இன்றும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களாக மும்பையில் கனமழை கொட்டி வரும் நிலையில் தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது.
ரயில், பேருந்து, வாகன போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மும்பை நகரிலும் அதையொட்டி அமைந்துள்ள நவி மும்பை, தாணே ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்து வரும் காரணத்தால் தமிழகத்தில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை முதல் மும்பை மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் மும்பை மக்களுக்கு அரசு அறிவித்துள்ளது.
மும்பை நகரிலும் அதையொட்டி அமைந்துள்ள நவி மும்பை, தாணே ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இதனால், சாலை, ரயில் மற்றும் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அடுத்த 48 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று மக்களுக்கு அரசு அறிவித்துள்ளது.
மும்பையில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி வரும் நிலையில் இன்று காலை முதல் நீண்ட நேரத்திற்கு கனமழை பெய்ததால், அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. மேலும் கடலிலும் சீற்றம் காணப்படுகிறது. நேற்று மாலையில் அதிகபட்சமாக 3.50 மீட்டர் உயரத்திற்கு கடலில் அலைகள் எழுந்தது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் தென்மேற்குப் பருவமழையால் 22.1 செ.மீ மழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெப்பச்சலனம் மற்றும் கடற்காற்றின் திசையைப் பொறுத்து கடலோர மாவட்டங்களின் சில இடங்களில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் பீகார் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்து வருகிறது.
மேலும் அங்குள்ள மகாநந்தா, கங்காய் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.
பீகார் மாநிலத்தில் பெய்துவரும் கன மழையால் பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீட்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய மக்களை படகுகளில் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை அதிகம் இருக்கும் வகையில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தின் சென்னை, தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக இரவு அல்லது காலை நேரங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் கிண்டி, வடபழனி, கோயம்பேடு, வில்லிவாக்கம், பெரம்பூர், புரசைவாக்கம், நந்தனம், உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்தது. இதனால் மைலாப்பூர் சிவசாமி சாலை உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கியதால் வாகன நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் வறண்டு கிடந்த ஏரிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கிருஷ்ணகிரியில் உள்ள அணை மற்றும் ஏரிகள் நிரம்பியுள்ளன.
தமிழகத்தில் இன்று மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று வானிலை நிலவரப்படி சென்னையில் வானம் மேகமுட்டதுடன் காணப்படும். இன்று மழை மற்றும் கனத்த மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தெலங்கானாவில் இருந்து தென் தமிழகம் வரை மேலடுக்கு சுழற்சி நீடிப்பதனால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புகள் உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களுரில் திங்கள் அன்று மாலை 4 மணி நேரத்தில் 14.சி.மி மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளனர்.
குஜராத்தின் பல இடங்களில் வெள்ளத்தின் காரணத்தால் 25000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக குஜராத்தில் கடும் மழை பெய்து வந்ததால் அங்கு பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மாநிலத்தில் எதிர்பார்க்கப்பட்ட மழை அளவில் 56.61% மழை பதிவாகியுள்ளது. வெள்ளத்தில் பனஸ்கந்தா பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. இங்கு வெள்ளத்தில் சிக்கி தவித்த 10,300 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால், அங்கு பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடுமையான வெள்ளப் பெருக்கினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 44-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா நதி உட்பட பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுவதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கி மூழ்கியுள்ளன.
டில்லி மற்றும் அதனை சுற்றிய புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ஆனால் இன்று காலை வழக்கத்திற்கு மாறாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கனமழையால் வெளிச்சம் குறைவாகவே உள்ளதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய செய்து செல்கின்றன.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் அதிகாரி கூறும்போது, "உத்தரப் பிரதேசத்தின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சித்தாபூர், பரேலி, லக்னோ ஆகிய நகரங்கள் பெருமளவு பதிக்கப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் பெய்த மழையினால் பெங்களூரு, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. கடந்த 7 ஆண்டு கால வரலாற்றில் தற்போதைய மழை பெரும் பொழிவாக இருந்ததாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவிக்கிறது.
பருவ மழை கர்நாடகாவில் 2 நாட்களாக பெய்து வருகிறது. இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. இதில் மைசூரு, மாண்டியா, அத்திபேலே, பெங்களூரு புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. மழை இன்றும் தொடர்ந்து பெய்து வருகிறது. பெங்களூருவில் பெய்த மழை 156 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.
சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் கடந்த மாதம் இறுதியில் பெரும்பாலான இடங்களில் மழை கொட்டியது. இதனால் வெயிலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் மகிழ்ச்சியை அடைந்தனர். ஆனால் வெயில் தனது உக்கரத்தை காட்டத் தொடங்கியது.
அசாமில் பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய நதிகளில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 100 கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளன. கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக சுமார் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 88,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் 6 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான விளை நிலங்கள்
நீரில் மூழ்கி உள்ளன. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள லகிம்பூர் மாவட்டத்தில் மட்டும் 7 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.