பெங்களூரில் கனமழை

Last Updated : Jul 29, 2016, 05:27 PM IST
பெங்களூரில் கனமழை title=

கர்நாடக மாநிலத்தில் பெய்த மழையினால் பெங்களூரு, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. கடந்த 7 ஆண்டு கால வரலாற்றில் தற்போதைய மழை பெரும் பொழிவாக இருந்ததாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவிக்கிறது.

பருவ மழை கர்நாடகாவில் 2 நாட்களாக பெய்து வருகிறது. இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. இதில் மைசூரு, மாண்டியா, அத்திபேலே, பெங்களூரு புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. மழை இன்றும் தொடர்ந்து பெய்து வருகிறது. பெங்களூருவில் பெய்த மழை 156 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.

மடிவாலா ஏரியில் இருந்து தண்ணீர் வெள்ளமாக வெளியேறியதால் பிடிஎம் லேவட், போடி சிக்கனஹல்லி, தண்ணீர் புகுந்துள்ளது. 500 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தன. இரு சக்கர வாகனங்கள் தண்ணீரில் மிதக்கின்றன , முதல் மாடி வரை தண்ணீர் புகுந்துள்ளது. பெங்களூரு சுற்று பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தீயைணைப்பு படையினர், தேசிய பேரிடர் குழுவினர் படகு மூலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகின்றனர். நாயந்தஹல்லி பகுதியில் கால்வாய் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. ஓசூர் ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பல இடங்களில் மரங்கள் முறிந்து சேதம் ஏற்பட்டுள்ளது. வரும் 1-ம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட இடங்களில் தேவையான உதவிகளை மக்களுக்கு அரசு செய்து வருகின்றனர்.

Trending News