ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேசிய தகுதித் தேர்வு நடைபெறுவது வழக்கம். கல்லூரி ஆசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கான தேசிய அளவிலான இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வர்த்தக வலைத்தளமான பிளிப்கார்ட்-ல் சாம்சங் சாதனங்களுக்கு சிறப்பு தள்ளுபடி சலுகைகள் அறிவித்துள்ளது. அதன்படி சாம்சங் ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச், ஹெட்போன், உதிரி பாகங்கள் மற்றும் தொலைகாட்சிகளுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி சலுகை வழங்கப்படுகின்றன.
ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுக்க இந்தியன் ரயில்வே முன்பதிவு வசதியை கொண்டு வந்தது.
இதில் மாதத்திற்கு ஆறு டிக்கெட்டுக்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்று நடைமுறை இருந்து வந்தது.
தற்போது ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என்பதில் மத்திய அரசு அனைத்திற்கும் ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் எண் அவசியம் என்று ரயில்வேத் துறை அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
ஆன்லைன் மூலமாக பாஸ்போர்ட்டுக்கான போலீஸ் விசாரணையை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் குற்றப்பின்னணி போன்ற தகவல்களை போலீஸார் நேரடியாக சரிபார்த்த பின்னர், அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுவது தற்போதைய நடைமுறையாக இருந்து வருகிறது.
இந்த நடைமுறையால் ஏற்படும் காலதாமதத்தைக் குறைக்க உள்துறை அமைச்சகம் ஒரு புதிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஐஐடி மாணவர் சேர்க்கைக்கு ஆண்டு தோறும் நுழைவுத்தேர்வு (ஜேஇஇ) நடத்தப்படுகிறது. பிரதான தேர்வு மற்றும் அட்வான்ஸ்டு தேர்வு என இரண்டாக நடத்தப்படும் இத்தேர்வில், பிரதான தேர்வை ஆன்லைன் மூலமும் எழுதுவதற்கான விருப்பத்தேர்வை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஏற்கனவே அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன் தொடர்ச்சியாக ஐஐடி மற்றும் என்ஐடி-களில் சேர தகுதி அளிக்கும் அட்வான்ஸ்டு தேர்வையும் 2018 ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் நடத்த ஐஐடி முடிவு செய்துள்ளது.
‘கபாலி’ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கான டிக்கெட் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்ட நிலையில் கபாலி திரையிடும் தியேட்டர்களுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது. விற்பனை தொடங்கிய 2 மணி நேரத்திலேயே வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.
வெள்ளி, சனி, ஞாயிறு விடு முறைநாட்கள் என்பதாலும், ரஜினியின் ‘கபாலி’ படம் பற்றிய எதிர் பார்ப்பு அதிகமாக இருப்பதாலும் டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்து விட்டதாக தியேட்டர் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.