UGC NET 2018: ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேசிய தகுதித் தேர்வு நடைபெறுவது வழக்கம். கல்லூரி ஆசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கான தேசிய அளவிலான இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Apr 6, 2018, 04:05 PM IST
UGC NET 2018: ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு title=

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேசிய தகுதித் தேர்வு நடைபெறுவது வழக்கம். கல்லூரி ஆசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கான தேசிய அளவிலான இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

இளநிலை ஆராய்ச்சி படிப்பு உதவித்தொகைக்கான கல்லூரி-பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கும் செட் அல்லது நெட் தகுதித் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயம். இதில் நெட் தேர்வை CBSE நடத்தி வருகிறது. 

2018-ஆம் ஆண்டுக்கான நெட் தேர்வானது ஜூலை 8-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும். ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க ஏப்ரல் 5-ம் கடைசி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இதற்கான கால அவகாசம் ஏப்ரல் 12 வரை நீட்டிக்கப்படுவதாக CBSE அறிவித்துள்ளது. 

Trending News