ஆன்லைன் மூலமாக பாஸ்போர்ட்டுக்கான போலீஸ் விசாரணையை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் குற்றப்பின்னணி போன்ற தகவல்களை போலீஸார் நேரடியாக சரிபார்த்த பின்னர், அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுவது தற்போதைய நடைமுறையாக இருந்து வருகிறது.
இந்த நடைமுறையால் ஏற்படும் காலதாமதத்தைக் குறைக்க உள்துறை அமைச்சகம் ஒரு புதிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
உள்துறை அமைச்சகத்தின் குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க்ஸ் அண்ட் சிஸ்டம்ஸ் இணையதளத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்களது தகவல்கள் சரிபார்க்கப்படும் நடைமுறை, அடுத்த ஓராண்டுக்குள் அமல்படுத்தப்பட இருப்பதாக உள்துறை செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷி தெரிவித்துள்ளார்.
நாட்டின் சில மாநிலங்களில் இந்த நடைமுறை தற்போது அமலில் இருந்தாலும், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பின்னர் பாஸ்போர்ட்டுக்காக நேரடியான போலீஸ் விசாரணை இருக்காது என்றும் அவர் கூறினார்.