பிரபல ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் தனது "Great Indian Sale" தள்ளுபடி விற்பனையினை கடந்த 21 முதல் துவங்கியது
இந்த தள்ளுபடி விற்பனை ஐன.,21 துவங்கி 24 ஆம் தேதி வரை நடைப்பெறும். அதே வேலையில் அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்கள் இந்த சலுகை விற்பனையின் ஜன., 20 அன்று பிற்பகள் 12 மணி முதல் பயன்படுத்திக்கொண்டு வருகின்றனர்.
இந்த சலுகை விற்பனையின் மூலம் வாடிக்கையாளர்கள், முன்னனி நிறுவனங்களான ஆப்பில், ஒன்ப்லஸ, சாம்சங், பூமா, அடிடாஸ், வ்ராங்லர், டைட்டன், அமெரிக்கன் டூரிஸ்டர், வெரோ மோடோ, பிபிஎல், மைக்ரோ மேக்ஸ், லினோவோ, ஹெச் பி, பிலிப்ஸ், வெற்பூல், பஜாஜ், ப்ரிஸ்டீஜ், உஷா போன்றவற்றின் பொருட்களை சலுகை விலையில் பெறலாம் என அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த சலுகை விற்பனையில், எச்டிஎஃப்சி வங்கியின் கிரெடிட் கார்ட், டெபிட் கார்டை பயன்படுத்துவோர்க்கு, சுமார் 10% வரை கேஷ் பேக் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது அமேசான்.
அதேப்போல், அமேசான் பே மூலம் ரூ.250 க்கு மேல் பொருட்களை வாங்குபவருக்கு ரூ.200 வரை கேஷ் பேக் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது!
இந்நிலையில் அமேசானின் "Great Indian Sale" தள்ளுபடி விற்பனையுக்கு இன்று கடைசி நாள் என்பதால் அதிகளவில் வாடிக்கையாளர்கள் அமேசான் ஆன்லைன் தளத்தில் காணப்படுவார்கள் என்று தெரிகிறது.