பிரபல ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் தனது "Great Indian Sale" தள்ளுபடி விற்பனையினை மீண்டும் துவங்கியுள்ளது!
வரும் ஐன.,21 முதல் துவங்கி 24 ஆம் தேதி வரை இந்த விற்பனை துவங்குகிறது. அதே வேலையில் அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்கள் இந்த சலுகை விற்பனையின் ஜன., 20 அன்று பிற்பகள் 12 மணி முதலை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த சலுகை விற்பனையின் மூலம் வாடிக்கையாளர்கள், முன்னனி நிறுவனங்களான ஆப்பில், ஒன்ப்லஸ, சாம்சங், பூமா, அடிடாஸ், வ்ராங்லர், டைட்டன், அமெரிக்கன் டூரிஸ்டர், வெரோ மோடோ, பிபிஎல், மைக்ரோ மேக்ஸ், லினோவோ, ஹெச் பி, பிலிப்ஸ், வெற்பூல், பஜாஜ், ப்ரிஸ்டீஜ், உஷா போன்றவற்றின் பொருட்களை சலுகை விலையில் பெறலாம் என அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த சலுகை விற்பனையில், எச்டிஎஃப்சி வங்கியின் கிரெடிட் கார்ட், டெபிட் கார்டை பயன்படுத்துவோர்க்கு, சுமார் 10% வரை கேஷ் பேக் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது அமேசான்.
அதேப்போல், அமேசான் பே மூலம் ரூ.250 க்கு மேல் பொருட்களை வாங்குபவருக்கு ரூ.200 வரை கேஷ் பேக் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது!