அவதூறான தகவலை வெளியிட்ட வலைத்தளத்தின் மீது 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா முடிவு செய்துள்ளார்.
பாஜக கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா மகன் ஜெய் ஷா. இவர் நடத்தி வரும் நிறுவனம் டெம்பிள் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்.
இந்த நிறுவனத்தின் லாபம் கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் 80 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஒரு தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் இன்று(வெள்ளிக்கிழமை) ராஜ்ய சபா உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
பா.ஜ.க தலைவர் அமித் ஷா மற்றும் ஸ்மிருதி இரானி இருவரும் இரகசியமாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதன் பிறகு ஸ்மிருதி இரானி, வெங்கையா நாயுடுவின் பாதங்களைத் தொட்டு வணகினார்.
அமித் ஷா மற்றும் ஸ்மிருதி இரானி இருவரும் இந்த மாதா தொடக்கத்தில் குஜராத்தில் இருந்து ராஜ்ய சபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பாஜக ஆளும் மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
இந்த சந்திப்பின் போது, வளர்ச்சி, சமூக நலப்பணிகள் மற்றும் 2019 மக்களவை தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
13 முதல் அமைச்சர்கள் மற்றும் 6 துணை முதல் அமைச்சர் சில அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். மக்களவை தேர்தலில் 350 இடங்களுக்கு மேல் கைப்பற்ற வேண்டும் என்பது குறித்து மோடியும், அமித்ஷாவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் நாளை சென்னை வர இருந்த நிலையில் அந்த பயணம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும், சுற்றுப்பயணம் செய்து வரும் அமித் ஷா நாளை சென்னை வர இருந்தார். இந்நிலையில் தற்போது அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளைமுதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜாஷ்வி யாதவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக கூறி, கடந்த மாதம் பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதீஷ் குமார் ராஜினாமா செய்தார். ஜே.டி.யு. மற்றும் ஆர்.ஜே.டி இடையே இருந்த பெரும் கூட்டணியை கலைத்தார். கூட்டணியை கலைத்த சில மணி நேரத்திற்குள் நிதீஷ் பழைய கூட்டாளியான பி.ஜே.பி உடன் புதிய கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சர் பதவி ஏற்றார்.
பெரும் எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்புக்கு இடையே குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவிற்கு 3 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது
பாஜக சார்பில் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேலும் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் குறைந்தபட்சம் 45 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் போதும் ஒரு எம்பியை தேர்ந்தெடுத்துவிட முடியும்.
குஜராத் ராஜ்யசபா தேர்தலில் தோற்கப் போகும் அகமது படேலுக்கு ஓட்டு போடவில்லை என காங்கிரசிலிருந்து விலகிய சங்கர் சிங் வகேலா இன்று கூறியுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்புக்கு இடையே குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவிற்கு 3 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
இதில், பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ராஜ்புத் ஆகியோரும், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
பெரும் எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்புக்கு இடையே குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவிற்கு 3 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ளது.
பாஜக-வுக்கு நல்லவர்கள் யார் வந்தாலும் அவர்களை ஏற்று கொள்வோம் என பாஜக தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
தனியார் டிவி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. காஷ்மீரில் ஏற்பட்டுள்ள பிரச்னையை மோடி அரசு கட்டுப்படுத்தும்.
அரசியலுக்கு வருவது பற்றி ரஜினிகாந்த் தான் முடிவு செய்ய வேண்டும். நல்லவர்கள் யார் வந்தாலும் அவர்களை பாஜக ஏற்று கொள்வோம். மேலும் ரஜினிகாந்துக்காக பாஜக கதவுகள் திறந்தே இருக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
உபி., உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, ஒடிஸா மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்ட திரிவேந்திரசிங் ராவத் இன்று பதவி ஏற்றார். பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உத்தரகாண்ட் முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் பதவியேற்றார். ராவத்துக்கு உத்தராகண்ட் ஆளுநர் கிரிஷன காந்த பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
உத்தரகாண்ட் மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்ட திரிவேந்திரசிங் ராவத் இன்று பதவி ஏற்கிறார். பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்
நடைபெற்று முடிந்த உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, பாரதீய ஜனதா கட்சி அபார வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 70 இடங்களில் அந்தக்கட்சி 57 இடங்களை வென்று, ஆட்சியை கைப்பற்றியது. அங்கு முதல்–மந்திரி பதவிக்கு 3 முன்னாள் முதல்–மந்திரிகள் உள்பட 6 பேர் கடும் போட்டியில் இறங்கினர். அவர்களில் முன்னாள் மத்திய மந்திரி சத்பால் மகாராஜ், பிரகாஷ் பந்த் உள்ளிட்டவர்கள் அடங்குவர்.
உத்தரகண்ட் மாநில முதல்வராக பா.ஜ.,வின் திரிவேந்திர சிங் ராவத் தேர்வு. நாளை (மார்ச் 18) பதவியேற்க உள்ளார்.
உத்தரகண்ட் சட்டசபை தேர்தலில் பா.ஜ., 57 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்த முதல்வராக யார் என்பதை தேர்வு செய்ய பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று டேராடூனில் நடந்தது. இதில் சட்டசபை குழு தலைவராக திரிவேந்திர சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நாளை முதல்வராக பதவியேற்க உள்ளார். இன்று நடைப்பெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டன.
500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்ட தினத்திலிருந்து (நவம்பர் 8) டிசம்பர் 31 வரை தங்களது வங்கிக் கணக்குகளில் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவர்த்தனை குறித்த அறிக்கைகளை ஜனவரி 1-ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். மேலும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் 70-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தையொட்டி, டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றினார்.
நாட்டின் 70-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் டில்லி செங்கோட்டையில் துவங்கியது. முப்படைகளின் அணிவகுப்பை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றினார்.
பாரதீய ஜனதாவில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் தலைவர்கள், 75 வயது நிரம்பியதும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகி வருகின்றனர். அந்த வகையில் வரும் நவம்பர் மாதத்தில் 75 வயது நிறைவடைய இருக்கும் குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை, டெல்லியில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழுவும் ஏற்றுக் கொண்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.